உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டிக்கு அன்னுார் வழியாக நான்கு வழிச்சாலை: ஒரு வாரத்தில் டெண்டர்

ஊட்டிக்கு அன்னுார் வழியாக நான்கு வழிச்சாலை: ஒரு வாரத்தில் டெண்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ''அவிநாசி-மேட்டுப்பாளையம் வரையிலான, 35 கி.மீ., துார நான்கு வழிச்சாலை அமைக்க ஒரு வாரத்தில் 'டெண்டர்' விடப்படும்,'' என, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.கோவை-அவிநாசி ரோட்டில் மேம்பால பணிகள், மேற்குப்புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், மூன்றாண்டுகளில், 664 கி.மீ., சாலைகளை மேம்படுத்த ரூ.997 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், 652 கி.மீ., துாரசாலை செப்பனிடப்பட்டு, மீதப்பணிகள் நடந்து வருகின்றன. நடப்பு, 2024-25ம் நிதியாண்டில், 148 கி.மீ., சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்டு,ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தம், 32 கி.மீ., துாரமுள்ள மேற்குப்புறவழிச்சாலை பணிகள் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமான, 12 கி.மீ., துாரத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு அடுத்தாண்டு ஆக., மாதத்துக்குள் முடிக்கப்படும். இரண்டாம் கட்டமான, 12 கி.மீ.,பணிக்கு, 95 சதவீத நில எடுப்பு முடிந்துவிட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமான, 8 கி.மீ.,க்கு நில எடுப்புபணி நடக்கிறது.அவிநாசி-கோவை சாலையில், ரூ.1,791 கோடி மதிப்பீட்டில் அடுத்தாண்டு ஜன., மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேம்பால பணி நடக்கிறது.தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக மூன்று பாலப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்களில் ஒருதரப்பினர் 'மெட்ரோ' ரயில் தேவை என்றும், ஒரு தரப்பினர் மூன்று பாலங்கள் வேண்டும் என்று கூறினர். கலெக்டர் தலைமையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு,மூன்று பாலங்கள் தேவை என பரிந்துரைக்கப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட பாலப்பணிகளை துவங்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து அனுமதி பெறப்பட்டது. அதில் ஒன்று சாய்பாபா காலனி பாலம் ரூ.72 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. சரவணம்பட்டி, சிங்காநல்லுாரிலும்பாலம்அமைகிறது. சிங்காநல்லுார் பணிக்கு ஒப்பந்ததாரர்முறையாக வராததால், மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.பொதுவாக கோவை வழியாக மேட்டுப்பாளையம் அடைந்து, அங்கிருந்து ஊட்டி செல்கின்றனர்.இதனால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, அவிநாசி-அன்னுார்-மேட்டுப்பாளையம் வரையிலான, 35 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை அமைக்க, ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் 'டெண்டர்' விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajendran S
நவ 07, 2024 07:18

652 கிலோமீட்டர் செப்பனிட பட்டுள்ளது சொல்றார் அமைச்சர், கோயமுத்தூர்ல பாக்குற இடமெல்லாம் ரோடுக குண்டும்,குழியுமாக இருக்க கூசாம பொய் பேசறாங்க,எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்....


தமிழன்
நவ 05, 2024 20:46

ஒரு கிலோமீட்டர்க்கு 1.5 கோடி... தங்கத்தால் ரோடு போடுகிறார்களோ


CBE CTZN
நவ 05, 2024 19:00

664 கிலோமீட்டர்க்கு, 997 கோடி... 1 கிலோமீட்டர் சாலை அமைக்க என்ன செலவாகிறது? 1.50 கோடி கிட்ட வர்ற மாறி இருக்கு... என் கணக்கு தப்போ...


அப்பாவி
நவ 05, 2024 17:20

உங்க ரேஞ்சுக்கு ஒரே வாரத்தில் சாலையே போட்டு முடிச்சிடலாமே...


mindum vasantham
நவ 05, 2024 09:33

காடுகள் மிருகங்கள் வாழும் ஊட்டிக்கு எதுக்கு நான்கு வழி சாலை ,தமிழர்கள் முட்டாளாக உள்ளனர் அதை பயன்படுத்தி இந்த அரசு கொள்ளை அடிக்கிறது


rama adhavan
நவ 05, 2024 08:42

மழை காலத்தில் எதற்கு சாலை விரிவாக்கம்?அடுத்த பட்ஜெட்டில் பின் வைத்துக் கொள்ளலாமே?


Duruvesan
நவ 05, 2024 08:06

இதே கண்டி எதிரி கட்சியா இருந்தா இந்நேரம் விடியல் சட்டையை கிழிச்சினு திரிஞ்சி இருப்பாரு


narayanansagmailcom
நவ 05, 2024 06:29

எந்த மந்திரி டெண்டர் எடுக்க போகிறாரோ. என்ன தில்லுமுள்ளு செய்ய போகிறார்களோ.


Anonymous
நவ 05, 2024 09:25

மொதல்ல மரம் மரமா வெட்டி சாச்சிருவாங்க, ரோடு போடுவது கிடக்கட்டும், இப்பவே ஊட்டி தலைகுந்தா ரோடு பக்கம் மழையை காரணம் காட்டி, லோடு லோடா மரம் வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது, வேலி பயிரை மேயும் கதை தான்.


Venkateswaran Rajaram
நவ 05, 2024 09:35

தில்லுமுல்லு செய்ரதுக்குத்தானே திட்டம் போடுறது ...திட்டம் போடாம தி மு பண்ணமுடியாதில்லே


Mani . V
நவ 05, 2024 05:47

அடுத்த தேர்தலுக்குள் கொள்ளையடித்து ஸாரி டெண்டரை முடித்து விடணும்.


J.V. Iyer
நவ 05, 2024 04:38

ஊழலுக்கு ஒரு டெண்டர். எவ்வளவு போகுமோ? எவ்வளவு சிக்குமோ? மாடல் அரசுக்கு கொண்டாட்டம்தான்.


சமீபத்திய செய்தி