உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொருநை அருங்காட்சியகம் திறப்பு

 பொருநை அருங்காட்சியகம் திறப்பு

தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி கரையில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களை காட்சிப்படுத்தும் பொருநை அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூ.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 8:30 மணிக்கு திறந்து வைத்தார். அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக் கூடம், சிவகங்கை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் என 54,296 சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னொளியில் ஜொலித்த அருங்காட்சியகத்தை இரவில் முதல்வர் ஸ்டாலின் பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டார். அருங்காட்சியகத்தின் சிறப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கி கூறினார். முதல்வர் இன்று காலை 10:00 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை