உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைமாறியது வாய்ப்பு: காங்., தலைவர் ஏமாற்றம்

கைமாறியது வாய்ப்பு: காங்., தலைவர் ஏமாற்றம்

சென்னை: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் வாய்ப்பு, காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவர் ராஜேஷ்குமாருக்கு கிடைக்கவில்லை.சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, அவர் மீது சட்டசபையில் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை, அ.தி.மு.க.,வினர் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் முன்மொழிந்தார். அவருக்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். அவரை தொடர்ந்து விவாதத்தில் பங்கெடுத்து, பல்வேறு சட்டசபை கட்சி தலைவர்கள் பேசினர்.காங்., சட்டசபை தலைவராக ராஜேஷ்குமார் உள்ளார். விவாதத்தில் அவர் பேசுவார் என, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நினைத்தனர். ஆனால், அவருக்கு பதிலாக, தமிழக காங்., தலைவரும் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகை பேசினார். பேசுவதற்கு குறிப்புகளை தயார் செய்து ஆர்வமுடன் சபைக்கு வந்த ராஜேஷ்குமார் ஏமாற்றம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ