உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேனர் பின்னணியில் எதிர்கட்சியா? வேங்கைவயலில் தீவிர விசாரணை

பேனர் பின்னணியில் எதிர்கட்சியா? வேங்கைவயலில் தீவிர விசாரணை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், இரண்டு ஆண்டுக்கு முன்பு மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட ஒரு பிளக்ஸ் பேனரின் போட்டோ சமூகவலை தளத்தில் பரவி வருகிறது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:வேங்கைவயல் சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26ல், வேங்கைவயல் கிராமத்தில் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், பேனர் வைக்கப்படவில்லை. இருந்தபோதும், அந்த பேனரை வீடியோ பதிவெடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். லோக்கலில் விசாரித்த வரையில், எதிர்கட்சியினர் தூண்டுதலில் தான் யாரோ இதை செய்திருக்க வேண்டும். தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜன 20, 2025 08:42

கால சூழ்நிலை சரியில்லை, காவல்துறை கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. தமிழக மக்கள் அனைவரும் என்றும் சட்டத்தை, காவல்துறையை மதிப்பவர்கள்


subramanian
ஜன 20, 2025 08:39

அந்த ஊர் மக்களின் கண்ணியத்திற்கும் , உலகத்தரம் வாய்ந்த ரசனைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்தாத கட்டுப்பாடு பாராட்டத்தக்கது.


subramanian
ஜன 20, 2025 08:34

இந்த பேனர் வைத்தவர்களை அகில உலக தமிழர்கள் சார்பாகப் பாராட்டுகிறேன். அருமையான கவிதை, பொருத்தமான புகைப்படம். திராவிட மாடல் சமூகநீதிக்கும், உலகமே போற்றும் திமுக ஆட்சிக்கும் அத்தாட்சி.


Svs Yaadum oore
ஜன 20, 2025 08:08

புலன் விசாரணையில் நகரா நத்தை , அசையா ஆமை ,அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் விடியல் போலீஸ் .....இது பாமரத்தனமான விடியல் சிரிப்பு போலீசை விட கேவலமாக இருக்குது ....80 வயது பாட்டியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிய கேவலமான விடியல் சிரிப்பு போலீஸ் ....


புதிய வீடியோ