உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 சீட்டு, 200 கோடி என்று பேரம் பேசும் எதிர்க்கட்சி கூட்டணி: உதயநிதி விமர்சனம்

20 சீட்டு, 200 கோடி என்று பேரம் பேசும் எதிர்க்கட்சி கூட்டணி: உதயநிதி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க.,வை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் நாங்கள் கூட்டணிக்கு அழைத்தால் 20 சீட்டு அல்லது ரூ.200 கோடி கேட்கிறார்கள் என்று சொல்கிறார். பேரம் பேசக்கூடிய கூட்டணி எதிர்க்கட்சி கூட்டணி,' என துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v1twoizq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாகையில் தி.மு.க.,நிர்வாகி திருமண விழாவில் உதயநிதி பேசியதாவது: இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையிலான மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதனால் எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமிக்கு அதிகமான வயிற்றெரிச்சல். காலம் முழுவதும் தமிழகத்திற்கு உழைத்த கருணாநிதி பெயரை எல்லா திட்டத்திற்கும் ஏன் வைக்கிறீர்கள் என்று அவருக்கு வயிற்றெரிச்சல்.

வெற்றி கூட்டணி

எப்படியாவது நம்ம கூட்டணி உடையாதா விரிசல் விழுந்து விடாதா என்று காத்து கிடக்கிறார். இந்த முறையும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வெற்றிக்கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் அமைப்பார். வெற்றி கூட்டணியை நோக்கி நாம் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியின் நிலைமையை யோசித்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு முன், அ.தி.மு.க.,வை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

200 தொகுதிகள்

நாங்கள் கூட்டணிக்கு அழைத்தால் 20 சீட்டு அல்லது ரூ.200 கோடி கேட்கிறார்கள் என்று சொல்கிறார். பேரம் பேசக்கூடிய கூட்டணி எதிர்க்கட்சி கூட்டணி. நம் கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி.தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்து, சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை வென்று காமிக்கும். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

S.L.Narasimman
நவ 25, 2024 10:46

அவர்களாவது கொடுக்க வசதி இல்லைன்னு அனுப்பி விடுவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் கூட்டணிகட்சிகளுக்கு நல்லாவே தொடர்ந்து கவனித்து கொத்தடிமைகளாய் பெர்மனென்டாக வைத்திருக்கிறீர்கள் .


Duruvesan
நவ 24, 2024 22:22

நாம ஆரிய பிராமண கிஷோருக்கு 160 கோடி குடுத்த மாதிரியா?


நிக்கோல்தாம்சன்
நவ 24, 2024 20:15

தமிழகத்தின்/தமிழ் நாடுவின் பெயரில் கடனை வாங்கி அடுக்கி கொண்டே போகிறீர்கள் , நீங்க சீட்டை காலிபண்ணுகையில் அந்த கடனை அடைத்து விட்டு தான் போகவேண்டும் என்று தமிழக மக்கள் கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 20:27

அய்யா தேசியா பசங்களே காங்கிரஸ் விட்டு சென்றது 54 லட்சம் கோடி அதுவம் 60 வருடத்தில் உங்க ஜி இப்போ அதை 205 லட்சம் கோடி என்று ஆக்கி இருக்கிறார் 10 வருடத்தில் இதை உலக மக்கள் கேட்க மாட்டார்களோ


நிக்கோல்தாம்சன்
நவ 25, 2024 21:06

நான் கேட்டதை புரிந்து கொண்டு பதில் அளியுங்க கேள்விக்கு கேள்விதான் பதில் என்றால் தமிழகம் உங்களோட பாகிஸ்தான் மாதிரி ஆவதை தடுக்க முடியாது


Ramesh Sargam
நவ 24, 2024 20:11

பேரம் எப்படி பேசவேண்டும் என்று கருணாநிதியின் பேரனிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.


duruvasar
நவ 24, 2024 19:45

அங்க அப்படி,இங்கே ஓடிபோகாம இருக்குனுமுன்னா 900 கோடி . எது நல்ல டீல்னு மக்களே முடிவு பண்ணிக்குங்க...


sankaranarayanan
நவ 24, 2024 18:58

அதானியிடம் எவ்வளவு கோடி யார் மூலமாக எப்படி பெறப்பது என்று இவர் கூறமுடியுமா இல்லை என்றுதான் மறுக்க முடியுமா அதானியின் வாயிலாகவே பணம் கொடுத்தது வந்துவிட்டது எவ்வளவு என்றுதான் இன்னும் வெளிவரவில்லை


nagendhiran
நவ 24, 2024 17:31

நீங்க எவ்வளவு தந்து கூட்டணியில் சேர்த்தீங்க?


GMM
நவ 24, 2024 17:14

மகளிர் உரிமை தொகை வரி பணத்தில் கொடுப்பது. வரி செலுத்துபவர் தேச அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு கருதி தான் செலுத்துவர். மகளிர் வங்கி கணக்கு கொடுக்கவும். நாங்கள் நேரிடையாக நொடியில் அனுப்பி , வரியில் கழித்து கொள்கிறோம். நாடே திரும்பும் வகையில் ஒரு மசோதா. நீதிமன்றம் தடை உத்தரவு. தேர்தல் ஆணையம் மறுப்பு போன்றவை இருந்தால், திராவிடம் கட்சி நிதியில் இருந்து கொடுக்க முன்வருமா. ? 20 சீட், 200 கோடி. விடை தெரியும் வரை நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை நிறுத்த துணிவு உண்டா. ? அரசு அமைப்புகளிடம் அதிகாரம் குவிப்பு. முறையாக அமுலாக்க தவிப்பு. முதலில் நீதிமன்றம் நிர்வாக முறை உள் இருக்க வேண்டும். நீதிபதியை விட, வக்கீல் அதிக பயன் பெற்று வருகின்றனர். பிஜேபியால் முடியவில்லை என்றால், சர்வாதிகாரியால் தான் முடியும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 24, 2024 16:44

நாங்கள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டு சீட்டுக்கு 25 கோடி கொடுத்தவங்க. எங்க கிட்டயேவா?


RAMA
நவ 24, 2024 16:27

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் பழமொழி நினைவுக்கு வருகிறது


புதிய வீடியோ