உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலம்பிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள்: மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தாக்கு

புலம்பிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள்: மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தாக்கு

சென்னை: பொறுத்துக் கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கு எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.விழுப்புரத்தில் நடந்த விழாவில் நேற்று, 'சில எதிர்க்கட்சி தலைவர்கள், நம் மீது குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது, ஆட்சியின் குறை இல்லை; அவர்கள் சிந்தனையின் குறைபாடு,'' என, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், இன்றும் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார். அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழக மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எப்பாடு பட்டேனும் நிறைவேற்றித் தரும் உறுதியுடன் செயல்படும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு மாவட்டங்கள்தோறும் மக்கள் அளித்து வரும் ஆதரவினையும் வரவேற்பினையும் ஒவ்வொரு முறையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன். திராவிட இயக்கத்தின் ஆணிவேராக இருப்பது சமூகநீதிக் கொள்கையாகும். உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீது தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதற்குக் காரணம், மக்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் செயல்படுவதுதான். அரசியல் கண்ணோட்டத்தில் எதிரணியினர் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், கழக அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாலும், மக்கள் அவர்களைப் புறக்கணித்து தங்கள் நலன் காக்கும் தி.மு.க., பக்கமே நிற்கிறார்கள். 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குகின்ற மக்களுக்கு என்றும் துணை நிற்போம். அவர்களின் ஆதரவுடன் 7 வது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்ற வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படும் இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

karupanasamy
ஜன 29, 2025 16:02

பெண்களும் தாய்மார்களும் வயிறெரிந்து மண்ணைவாரி தூற்றி விடும் சாபத்தின் வலிமையை தேர்தல் முடிவுகள் புரியவைக்கும்.


nagendhiran
ஜன 29, 2025 14:20

ஆமாம் தலைவரே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை