உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் தே.ஜ., கூட்டணியில் தொடர்கிறார்கள்; நயினார் நாகேந்திரன்

ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் தே.ஜ., கூட்டணியில் தொடர்கிறார்கள்; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்., என இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறார்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்சி தலைவர் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம். அது அவரது முடிவு. தமிழகத்தில் மக்களுக்கு விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். எல்லோரும் ஒரு அணியில் திரள வேண்டும். மக்கள் நலன் கருதி அனைத்துக் கட்சி தலைவர்களும் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2jdzm2zy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிருபர்: சென்னை வந்த அமித்ஷா தன்னை சந்திக்காமல் சென்றது வருத்தம் அளிப்பதாக ஓ.பி.எஸ்., தெரிவித்திருந்தார். நயினார் நாகேந்திரன் பதில்: அமித்ஷா வேறு விஷயமாக வந்ததால் ஓ.பி.எஸ்.,ஸை சந்திக்கவில்லை. ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருப்பதால் அவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., என இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.இதையடுத்து 2031, 2036-லும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என தமிழக முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, 'சொல்வதற்கு எல்லாம் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் முடிவை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான். ஒரு கட்சி ஆட்சி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்தாலும் ஆட்சி அமைக்கும் முடிவை மக்களே தீர்மானிப்பார்கள் என எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலேயே தெரிவித்தார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராமகிருஷ்ணன்
மே 17, 2025 10:01

இரட்டை இலை சின்னத்தில் 2 அணிகள் இருக்க கூடாதா, திமுக தோல்வி அடைய இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம்


Narayanan Muthu
மே 16, 2025 20:44

ஒண்ணுமே புரியலையே


J.Isaac
மே 16, 2025 19:34

ஊரு இரண்டுப்பட்டா கூத்தாடிக்கு தொக்கு


Raja
மே 16, 2025 17:45

துரோகி பன்னீரை மறுபடியும் சேர்த்தால் .... தேவையில்லாமல் கூட்டணிக்குள் குழப்பம் உண்டாகும். அண்ணாமலை இதை செய்துதான் எல்லாம் நாசமா போச்சு. மறுபடியும் முதல்ல இருந்தா?


Narayanan Muthu
மே 16, 2025 20:36

எனக்கு வேறே வழி தெரியல ஆத்தா. ஆனாலும் கூட்டணி மகா கூட்டணின்னு சொல்லித்தான் வோட்டு கேக்கணும்.


பல்லவி
மே 16, 2025 17:42

பூனையிடம் பால் கட்டியை பங்கு வைக்க கொடுத்து விட்டு தலையில் கை வைத்த கதை தெரியுமா


ஆரூர் ரங்
மே 16, 2025 16:45

சசிகலா, தினகரன் இருக்காங்களா ?.


Narayanan Muthu
மே 16, 2025 20:37

பருப்பு இல்லாம கல்யாணமா


ஆரூர் ரங்
மே 16, 2025 16:44

எடப்பாடி சிரிக்காத முகத்துடன் கூட்டணி அறிவிப்பு நிகழ்வில் நின்றார். இப்போ சிரிப்பாய் சிரிக்கிறார்.


Narayanan Muthu
மே 16, 2025 20:42

தேர்தல் முடிவுக்கு பிறகு எல்லாம் சிரிப்பாய் சிரிக்க போகுது. அப்பா நாமளும் கூட சேர்ந்து சிரிக்கலாம் இல்ல.


முருகன்
மே 16, 2025 15:05

எங்க தலைவர் எடப்பாடி யார் கருத்து என்னவாக இருக்கும்


அப்பாவி
மே 16, 2025 15:01

இப்பிடித்தான் மாத்தி மாத்யி பேசி அதிமுகவையே ஒழிச்சுக் கட்டிருவாங்க.