உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி

அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி

சென்னை: '' அரசியலில் எதுவும் நடக்கலாம்,'' என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=puzxnzjc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பிறகு, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் ஓ.பி.எஸ்., தரப்பு அறிவித்தது.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் ஓபிஎஸ் மீண்டும் உடன் இருந்தார். அவருடன், மகன் ரவிந்திரநாத், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை, துணை முதல்வர் உதயநிதி வாசல் வரை வந்து வரவேற்றார். அரசியலில் எதுவும் நடக்கலாம்: ஓபிஎஸ் பேட்டிமுதல்வருடன் அரை மணி நேரம் சந்தித்து பேசியபின் ஓபிஎஸ் கூறியதாவது: மரியாதை நிமித்தமாகவே முதல்வரை சந்தித்தேன். மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவரிடம் உடல் நலம் விசாரித்தேன். கருணாநிதி மூத்த மகன் முத்து மறைவுக்கு ஆறுதல் கூறினேன். ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரிகளும் இல்லை.அரசியலில் எனக்கென்று சுய மரியாதை உண்டு. மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி நிதி தராததால் எனக்கு வருத்தம். நடிகர் விஜயுடன் நானும் பேசவில்லை; அவரும் பேசவில்லை. பாஜ உடன் கூட்டணி அமைத்துள்ள இபிஎஸ்க்கு வாழ்த்துக்கள் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை, தேமுதிகவின் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 01, 2025 14:34

அரசியலில் எதுவும் நடக்கலாமா ? , அரசியலில் எங்கோ கிடந்த டீக்கடை பந்நீரை முதல்மைச்சராக்கியது அதிமுக ...ஜெயலலிதா .. கொஞ்சமாச்சும் நன்றி விசுவாசத்துடன் நடக்கவேண்டாமா ? தர்மயுத்த நடிப்பு ..ஜெயலலிதாவின் சமாதியில் தியான நடிப்பு சூப்பர் ..


Nallavan
ஆக 01, 2025 10:37

எக்ஸ், தினகரன் மற்றும் சசிகலா, ஆகியோர் இவரை கடைசி வரை சேர்க்காமல் இருந்ததன் அர்த்தம், இப்போது புரிகிறது. இவர்களது சந்திப்பை தி.மு.க. ஆட்களே ரசிக்க மாட்டார்கள். பாவம் இவரை நம்பி போனவர்கள்.


பிரேம்ஜி
ஆக 01, 2025 07:25

ரொம்ப ரொம்ப... நாட்டுக்கு நல்லது! ஒன்று மட்டும் புரியவில்லை! இவர் இத்துப்போன கயிறு! நமத்துப்போன பட்டாசு! திமுகவுக்கு எந்த பிரயோசனமும் இல்லாத இவரை திமுக தலைவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டிய அவசியம் என்ன?


sundaresan
ஆக 01, 2025 05:55

வெட்கம் கெட்டவர்கள்.பதவிக்காக எதுவும் செய்பவர்கள்


venugopal s
ஜூலை 31, 2025 21:59

ஓ பி எஸ் க்கு இப்போது தான் நல்ல புத்தி வந்து திருந்தி விட்டார் போல் தெரிகிறது!


vivek
ஜூலை 31, 2025 22:09

ஆமாம் அவர் புடின் இவரு டிரம்ப்..நடுவுல வேணுகோபால்..


krishna
ஜூலை 31, 2025 23:05

DRAVIDA MODEL OOPIS KUMBALUKKU NALLA BUDHIYAA SEMMA JOKE.KOLAI KOLLAI KAPAZHIPPU TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI IDHUDHAAN NALLA BUDHI ENA BUDHIYE ILLADHA EERA VENGAAYAM VENUGOPAL MUTTU.ASINGAM.


Haja Kuthubdeen
ஆக 01, 2025 08:26

ஆமா ஓப்பீஸ் திருந்திட்டார்.. அவர உங்க கட்சியில் சேர்த்துக்கங்க.. நேத்து நைட் வரை மோடிய சந்திக்க தவமா கிடந்து மோடி மறுத்ததும் ஸ்டாலின பார்க்க போயிட்டார்...


என்னத்த சொல்ல
ஜூலை 31, 2025 21:37

இவரை பிஜேபி எப்போதும் மதிக்காது. பெருசுக்கு இப்போதான் புரிஞ்சுது...


Ramesh Sargam
ஜூலை 31, 2025 21:27

OPS, ஸ்டாலின் அவர்களை ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் சந்தித்திருக்கிறார். ஒருவேளை காலை சந்திப்பின்போது ஸ்டாலின் காலில் வெட்டவெளியில் வெளிச்சத்தில் காலில் விழ கூச்சப்பட்டு, மாலை வீடு சென்று அங்கு ஸ்டாலின் காலில் விழுந்திருக்கலாம். பதவி ஒன்றே குறி. மற்றபடி மானம், மரியாதை எல்லாம் எதற்கு?


VENKATESWARAN RAJARAM
ஜூலை 31, 2025 21:04

இவர் சொல்வது 100% உண்மை... பாவப்பட்ட மக்கள் தான் பைத்தியக்காரர்கள்


Ramesh Sargam
ஜூலை 31, 2025 20:44

ஆமாம் அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆமாம் நாங்க பதவிக்காக வயது பார்க்காமல், மானம் மரியாதை பார்க்காமல் காலில் கூட விழுவோம். மானம் மரியாதை எந்த அரசியல்வாதிக்கு இருந்தது...


Sudha
ஜூலை 31, 2025 20:38

ஜாதி ஓட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஜாதிகள் இல்லையடா, ஒன்றே எதிரியாடா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை