உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்

சென்னை: கோவை, நீலகிரிக்கு இன்று (ஜூன் 13) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 13) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* ஈரோடு* கிருஷ்ணகிரி* தர்மபுரி* தென்காசி* தேனி* கன்னியாகுமரிநீலகிரிக்கு வரும் ஜூன் 14,15 ஆகிய 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.நாளை (ஜூன் 14) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* தென்காசி* கன்னியாகுமரிகனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தேனி* திண்டுக்கல்நாளை மறுநாள் (ஜூன் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலை ப்பகுதிகள்* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசி* கன்னியாகுமரிகனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருப்பூர்* திண்டுக்கல்* மதுரை* விருதுநகர்சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ