அலுவலக உதவியாளர் நியமிக்க உத்தரவு
சென்னை : வருவாய் துறையில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாயிலாக, விதிகளுக்கு உட்பட்டு நிரப்பி கொள்ளலாம் என, வருவாய் துறை செயலர் அமுதா உத்தரவிட்டு இருந்தார். ஆனால், காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 'காலி பணியி டங்களை காலம் தாழ்த் தாமல் நிரப்ப வேண்டும். அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமாருக்கு, வருவாய் துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.