உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் வழக்கில் முதல் தகவல் அறிக்கை விபரம் தாக்கல் செய்ய உத்தரவு

டாஸ்மாக் வழக்கில் முதல் தகவல் அறிக்கை விபரம் தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை : 'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈ.சி.ஐ.ஆர்., என்ற வழக்கு தகவல் பதிவேடில் குறிப்பிட்டுள்ள, முதல் தகவல் அறிக்கைகளின் விபரங்களை தாக்கல் செய்யுங்கள்' என, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், 3வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடியதாவது:விசாரணையை துவக்கிய அன்றே, அமலாக்கத்துறை நேரடியாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்ததன் நோக்கம் என்ன; சோதனைக்கு வந்த நாளில், முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், அமலாக்கத்துறை வசம் இல்லை. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு, தமிழக அரசு வழங்கி இருந்த ஒப்புதல், 2023ம் ஆண்டு ஜூன், 14ல் திரும்ப பெறப்பட்டது.அவ்வாறு இருக்கும் போது, மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கைகள் விபரங்கள் இல்லாமல், வாதங்களை முன் வைப்பது என்பது இயலாத காரியம். நாட்டில் உள்ள, 29 மாநிலங்களில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்த துவக்கினால், அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதாடினர்.தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அமலாக்கத் துறை நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. டாஸ்மாக் நிறுவன பெயர், முதல் தகவல் அறிக்கையில் இல்லை. முறைகேடு தொடர்பாக பதிவான, 42 முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சோதனை நடத்தியதாக, அமலாக்கத்துறை கூறுகிறது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தது தெரியவந்தால், அது தொடர்பாக மாநில அரசு உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.அப்போது நீதிபதிகள், 'டாஸ்மாக் முறைகேடு புகார் விசாரணைக்கு, அமலாக்கத் துறைக்கு மாநில அரசு உதவலாமே' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''சட்டத்தை மீறி, அமலாக்கத்துறை இவ்வளவு செய்த பின் எப்படி உதவ முடியும்; அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கும் போது, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் வரை மோசடி என, தேசிய கட்சியின் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்,'' என்றார்.'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈ.சி.ஐ.ஆர்., என்ற வழக்கு தகவல் பதிவேடில் குறிப்பிட்டுள்ள, முதல் தகவல் அறிக்கைகளின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Arjun
ஏப் 16, 2025 10:19

பாலுக்கு பூனை காவலாம் ஊழலே மந்திரிகளும் அதிகாரிகளும் செய்தது, இதில் தமிழக அரசே? விசாரிக்குமாம் நல்லா இருக்கு


GMM
ஏப் 16, 2025 10:16

மத்திய அரசு முதல் நடவடிக்கையாக மூல வழக்கு வெளியே விசாரணை நடத்துவதை சட்டம் மூலம் அல்லது நிர்வாக உத்தரவு மூலம் தடுத்தால் மத்திய அமுலாக்க, புலனாய்வு அமைப்புகள் வழக்கில் அதிகம் வெற்றி பெற்று விடும். 1. டாஸ்மாக் ஊழல் இல்லை. 10 மசோதா சட்டபடி சரியானது. 3. வக்ஃபு சட்டம் செல்லும் அல்லது செல்லாது. இதன் சட்ட விதிகளை நீதிபதி பதிவு செய்தால் குறைபாடு உடைய சட்ட திருத்தம் செய்ய உதவும்.


Padmasridharan
ஏப் 16, 2025 09:22

"அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும்.. " இவங்கெல்லாம் சாமானிய மக்களை துன்புறுத்தும்போது ஒருத்தரும் கூட்டு சேர்ந்து கேட்கமாட்டாங்க.. பெண்களுக்கு மாதா மாதம் பணம் கொடுத்து அதை வீட்டின் ஆண்கள் TASMAC க்கில் கொடுத்து.. இதுவே ஒரு முறைகேடுதான்..


S.V.Srinivasan
ஏப் 16, 2025 09:12

அமலாக்க துரையின் செயல்பாடு தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்யம்தான். ஒரு வழக்கிலும் உருப்படியான தீர்ப்பு இல்லை. ஒரே சொதப்பல். ஊரை ஏமாற்றி உலையில் போட்டவர்கள் நல்லவர்கள் என்றாகி விடுகிறது. என்னவோ போடா மாதவா.


Velan Iyengaar
ஏப் 16, 2025 08:37

எந்த FIR களை வைத்து அமுலாக்கத்துறை உள்ளே வந்ததோ அவற்றில் மிக மிக பெரும்பான்மையான FIR கள் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கானது என்பது வெட்டவெளிச்சமாகும் .... ஹா ஹா ஹா ... அந்த கட்சி கூட தான் கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை மக்கள் எப்படி பார்ப்பார்கள்? அமுலாக்கத்துறை உள்ளே நுழைய குறைந்தபட்ச அரசிற்கு குறைந்தபட்ச நஷ்டம் தொகைக்கு மேலே தான் இருக்கவேண்டும்.. அப்படி திமுக ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட 6 அல்லது 7 FIR க்கள் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் அந்த தொகைக்கு கீழே இருந்த காரணத்தால் அடிமை கட்சி காலத்தில் பதியப்பட்ட 35-36 FIR க்களை இணைத்துக்கொண்டு சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தது வெட்டவெளிச்சமாகும் ... அமுலாக்கத்துறை மானமும் ஒன்றிய அரசின் மானமும் உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மற்றும் தேர்தல் ட்ரஸ்ட் மெகா ஊழல் bj கட்சி மானமும் பறப்பது மட்டும் அல்ல ...கூட்டணி அடிமை கட்சியின் மானமும் பறக்கப்போகுது


GMM
ஏப் 16, 2025 08:21

கருணாநிதி வீராணம் ஊழல் முதல் விசாரணையை இடை மறித்து வழக்காக்கி, சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டு ஊழலை ஊக்குவிக்கும் கலை அறிந்தவர்கள் கழக வக்கில்கள். டாஸ்மாக்கில் ஊழல் இல்லை என்று டாஸ்மாக், தமிழக பிரதிநிதி, வழக்கறிஞர் யாரும் கூற முன் வரவில்லை. அமுலாக்க துறை அனுமதி பெறவில்லை, 2013 ல அனுமதி ரத்து செய்து விட்டோம். நகல் கொடுக்கவில்லை, சாப்பிட விடவில்லை, இரவில் விசாரணை போன்ற பல திசை திருப்பும் திகில் வழக்கு விசாரணை அனுமதிக்கும் வரை ஊழல் கூட்டணியை பிரிக்க முடியாது. கேஜ்ரிவால் விட ஊழல் பல மடங்கு தெளிவாக தெரிகிறது. ?


ramani
ஏப் 16, 2025 07:40

ஊழல் நடந்திருந்தால் தமிழக அரசு விசாரிக்குமாம். எப்படியெல்லாம் ஜோக் அடிக்கறாங்க. ஊழலே மந்திரிங்க மேல்தான் அப்படியிருக்கும் பொழுது எப்படி தமிழக அரசு வழக்கு தொடுக்கும்


ஆரூர் ரங்
ஏப் 16, 2025 07:38

டாஸ்மாக் மாநில அரசின் துறை அல்ல. அது ஒரு கார்பரேட் நிறுவனம். அதில் ரெய்டு நடத்துவதற்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் சம்பந்தமில்லை.


மீனவ நண்பன்
ஏப் 16, 2025 06:48

வழக்கு போகும் போக்கு சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது


திராவிடிய ஐயர்
ஏப் 16, 2025 06:23

இவிங்களுக்கு தேவை என்றால் ஐயர் வக்கீல் ஐயர் மருத்துவர்.. ஆனால் மேடையில் பேசுவது சனாதனத்தை எதிர்த்து. அறுப்பது குடுமியை பூநூலை.. ஆனால் இவர்களுக்கு வாதாட வக்கீல் அய்யர்.. உம்


மீனவ நண்பன்
ஏப் 16, 2025 06:46

ஐயர் என்று பெயரில் போட்டுக்கொள்வதில் என்ன ஆனந்தம் உங்களுக்கு ? அல்லது உண்மையே அது தானா ?


Velan Iyengaar
ஏப் 16, 2025 09:38

பலவிதமான புனைபெயர்களுக்கு நான் காரணம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி


Velan Iyengaar
ஏப் 16, 2025 09:51

திராவிடிய என்று இவர்கள் செய்யும் அளப்பறைக்கு ஆரியர்களே காரணம் என்பது தான் தமாசு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை