உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புகையிலை விற்றால் அபராதம் 5 மடங்கு அதிகரித்து உத்தரவு

புகையிலை விற்றால் அபராதம் 5 மடங்கு அதிகரித்து உத்தரவு

திருநெல்வேலி:தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை விற்பனை செய்தால் விதிக்கப்படும் அபராதத்தை 5 மடங்கு அதிகரித்து உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டதுதமிழகம் முழுவதும் பலசரக்கு, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு எதிராக உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே புகையிலை விற்பனை செய்வதற்காக வழக்கு தொடரப்பட்ட கடைகளும் மீண்டும் சீல் வைக்கப்படுகின்றன.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பாலமுருகன் என்பவரின் பலசரக்கு கடை, கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் நடராஜ் என்பவரது மளிகை கடையிலும் சோதனையில் புகையிலை பொருட்கள் இருந்தன. இரண்டு கடைகளுக்கும் நேற்று சீல் வைக்கப்பட்டன.தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறுகையில், தமிழகம் முழுவதும் புகையிலை போதை பொருட்களின் விற்பனை 2013 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு 2019 முதல் முதல்முறையாக விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக விற்பனை செய்து சோதனையில் பிடிபட்டால் ரூ .10 ஆயிரம், 3வது முறையாக விற்பனை செய்தால் ரூ .25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார். முதன்முறையாக சோதனையில் புகையிலை பிடிபட்டால் அபராத தொகை ரூ .25 ஆயிரம், இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ. 50 ஆயிரம், மூன்றாவது முறையாக பிடிபட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் கூட்டு நடவடிக்கையில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 80 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி