கல்லுாரிகளில் சிசிடிவி பொருத்த உத்தரவு
சென்னை:சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் சில மாதங்களுக்கு முன், மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு, பல்கலை வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அதிகாரிகள் தலைமையில் சமீபத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த வழிகாட்டுதல்கள், அனைத்து அரசு மற் றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: டி.ஜி.பி., உத்தரவின்படி, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடங்களில், கட்டாயம் கேமராக்கள் பொருத்த வேண்டும். 'பாதுகாப்பு தணிக்கை' எனும் வழிகாட்டுதல் களின்படி, கல்வி நிறு வனங்களில், மின் விளக் குகள் இல்லாத, பழுதான பகுதிகளில் விளக்குகள் அமைக்க வேண்டும். மாணவ - மாணவியர், பேராசிரியர், பணியாளர்கள் தவிர, கல்லுாரிக்குள் நுழையும் வெளி நபர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.