உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சோழர் வரலாற்றை அறிய ஒற்றன் பாதை சுற்றுலா

 சோழர் வரலாற்றை அறிய ஒற்றன் பாதை சுற்றுலா

சென்னை: சோழர் கால வரலாற்றை, தமிழக சுற்றுலா பயணியர் அறியும் வகையில், 'ஒற்றன் பாதை' என்ற, சிறப்பு சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. சோழ பேரரசின் புகழை பிரதிபலிக்கும் இத்திட்டம், கடலுார் மாவட்டம் வீராணம், பிச்சாவரம், சிதம்பரம், தாராசுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய சோழர் கால வரலாற்று தலங்களை உள்ளடக்கிய மூன்று நாள் தொகுப்பு சுற்றுலாவாகும். மே, 1 முதல், இச்சுற்றுலா அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளது. சுற்றுலா வருவோருக்கு, பயணத்தில் நிபுணர்கள் வழிகாட்டுதலுடன், சோழர் கால கட்டட கலையின் சிறப்புகள், போர் தந்திரம், கடற்படையின் செயல்பாடு, வர்த்தகம் உள்ளிட்ட கலாசார மரபுகள் குறித்து விவரிக்கப்படும். இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு, 16,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பயணியர், 'ஏசி' பஸ்சில் அழைத்து செல்லப்படுவதோடு, மூன்று நாள் தங்குமிடம், உணவு போன்றவையும், சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களை, www.ttdconline.comஎன்ற இணையதளத்தில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி