உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம் இலக்கு பெரியது; கடுமையாக உழையுங்கள்; பா.ஜ.,வினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!

நம் இலக்கு பெரியது; கடுமையாக உழையுங்கள்; பா.ஜ.,வினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கட்சியினருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை படிப்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அங்கு இருந்து அவர் பா.ஜ.,வினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:அன்பு தலைவர்களே, தொண்டர்களே உங்கள் தலைவர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். கட்சி பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zowou7oh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கோரிக்கை

அருமை சொந்தங்களே கடந்த சில நாட்களாக பா.ஜ., நிர்வாகிகள் மிகக் கடுமையாக களத்தில் உழைத்து கொண்டிருக்கிறீர்கள். பா.ஜ.,வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக, நம்முடைய குடும்பத்தை இன்னும் வேகப்படுத்துவதற்காக உழைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கக்கூடிய கோரிக்கை, நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால் நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியை அனைவரும் பார்த்து கொாண்டிருக்கிறார்கள். மக்களின் அன்பு பா.ஜ.,வின் பக்கம் வர துவங்கியிருக்கிறது.

செய்து காட்டுங்கள்

நிறைய மனிதர்கள் நம்முடன் இணைய வேண்டும். அன்பு சொந்தங்கள் நம்முடன் இணைய வேண்டும். இந்த நேரத்தில் நம்முடைய இலக்கை மிகத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். ஒரு பூத்தில் குறைந்தபட்சம் 200 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும். இது பெரிய இலக்காக இருந்தாலும், நிச்சயம் இது நம்மால் செய்து காட்டக்கூடிய இலக்கு தான். நம்மளால் நிச்சயமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு, நமது கட்சி தலைமை நமக்கு அளித்துள்ள இலக்கு. ஒரு நாளில் மண்டல அளவில் 500 பேர் பா.ஜ.,வில் இணைந்தால் மட்டும்தான் குறிப்பிட்ட காலத்தில் நம் இலக்கை எட்ட முடியும். நாங்கள் உங்களுடன் வைக்க கூடிய அன்பான வேண்டுகோள்.

அதிக உறுப்பினர்கள்

தினமும் கட்சியில் இணையும் புதியவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். இலவச செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வையுங்கள். தினமும் கூட அவர்கள் பதிவேற்றம் செய்யும் போது அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் களத்தில் இருந்து புதியவர்களுக்கு உதவி செய்யுங்கள்.ஒவ்வொரு நாளும் நமக்கு மிக முக்கியம். புதியவர்களை கட்சியில் இணைப்பது தான் மிக முக்கியமான பணி. இந்திய அளவில் அதிகளவிலான உறுப்பினர்கள் தமிழக பா.ஜ.,வில் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எல்லாரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்து செயல்பட வேண்டும். நீங்கள் இதை செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்து காட்ட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
செப் 22, 2024 18:39

நல்லாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணுங்க.


R Kay
செப் 22, 2024 16:55

மற்ற கட்சிகளை போலில்லாமல் குறைந்தபட்சம் பாஜகவிலாவது உழைத்தவர்களை அங்கீகரியுங்கள். கட்சி தானாய் வளரும். உழைத்தவனுக்கு அல்வாவும், மாற்று கட்சியிலிருந்து ஒரு ஆணியையும் பிடுங்காமல் நேற்று வந்து சேர்ந்தவர்களுக்கு பதவிகளையும் கொடுத்து பாஜகவும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதீர்கள்.


பாமரன்
செப் 22, 2024 13:11

இதெல்லாம் அறிவுரை சொல்லி கேட்கும் நிலையில் பாஜகவை வச்சிக்கிட்டு தமிழ் நாட்டில் தாமரை மல்லாரும்னு நினைக்கிறாய்ங்க... பாவம் ராசா இம்சை மாதிரி ஆட்கள்... எங்கன போயி இருபதாயிரம் பொஸ்தகத்த படிச்சு தலீவர மாதிரி ஆக போறாங்கன்னு தெர்ல... ம்மே ம்மே...


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 22, 2024 16:07

ஏலே பக்கோடா பாமரா உனக்கு அவர் சொல்றத புரிஞ்சிக்கிற அளவு அறிவு கெடையாது அப்படி ஓரமா...


கோவிந்தராக
செப் 22, 2024 11:34

தமிழ்நாட்டுல முடிந்தது இனி சர்வதேச அரசியலா முதல்ல இங்க ஜெமிக்க வழிபாரு போன நோக்கம் வேறாக இருக்கலாம்


spr
செப் 22, 2024 11:23

"இந்த நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசி என்றவர், ஜான்.எஃப்.கென்னடி. "பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் இது பாரதியின் கவிதை. இவர்கள் எவருமே தங்களை இணைத்துக் கொள்ளாமல், பிறருக்கு புத்திமதி சொன்னவர்கள். அப்படியில்லாமல், "நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று சொல்ழும் போது தன்னையும் அதனோடு இணைத்துக் கொள்ளும் தலைவர்களே நாட்டுக்குத் தேவை திரு அண்ணாமலை தன்னை முன்னாள் காவற்துறை அதிகாரி என்று நினைத்து எல்லோரிடமும் காட்டமாகப் பேசாமல், இணக்கமாகப் பேசி எல்லோரையும் அரவணைத்துப் போகப் பழகினால் தமிழகத்தில் பாஜக இன்னமும் அதிகமாக அறியப்படும். தமிழ்நாட்டுக்கு சில கோரிக்கைகள் மத்திய ஆட்சியாளரால் ஏற்கப்பட முடியாமல் போனாலும் அது குறித்து அவர்களுடனும் பேசி உரிமைகளை பெற்றுத்தந்தால் இவர் போற்றப்படுவர் இல்லையேல் பாஜகவின் பத்தோடு பதினொன்றாகிவிடுவார்


தமிழ் நாட்டு அறிவாளி
செப் 22, 2024 11:15

என்ன அண்ணாமலை மீசையா காணும்


சமீபத்திய செய்தி