உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நவீனமயமாகிறது நம்ம சாலை செயலி; பிற துறை சாலைகளுக்கும் நிவாரணம்

 நவீனமயமாகிறது நம்ம சாலை செயலி; பிற துறை சாலைகளுக்கும் நிவாரணம்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை உருவாக்கிய, 'நம்ம சாலை' செயலி, மற்ற துறைகளின் சாலைகள் குறித்து புகார் அளிக்கும் வகையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 66,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து புகார் அளித்தால், விரைந்து சீரமைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 'நம்ம சாலை' எனும் மொபைல் போன் செயலி, கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, மாநில நெடுஞ்சாலைகளில் பெறப்படும் புகார்கள் மீது, 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த செயலியில், சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சிகள், ஊரக உள்ளாட்சிகளின் சாலைகளின் மோசமான நிலை குறித்தும் பலர் புகார் செய்கின்றனர். பொது மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாலைகள் மட்டுமின்றி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் குறித்தும், நம்ம சாலை செயலியில் புகார்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நெடுஞ்சாலைத் துறையின் நம்ம சாலை செயலி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது; இது விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ