உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!

சட்டவிரோத குடியேற்றம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு திரும்பிய வங்கதேசத்தினர் 2 ஆயிரம் பேர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, கடும் நடவடிக்கைக்கு பயந்து, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து நாடு திரும்பி உள்ளனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது. இதில், பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் சூறையாடப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்போது எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதற்கிடையே சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, கடும் நடவடிக்கைக்கு பயந்து, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து நாடு திரும்பி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தானாக முன் வந்து நாடு திரும்புகின்றனர்.திரிபுரா, மேகாலயா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.குறிப்பாக, டில்லி மற்றும் ஹரியானாவில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு திரும்பி உள்ளனர். அசாம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Keshavan.J
ஜூன் 02, 2025 19:57

இன்னும் பல கோடி உள்ளார்கள். அவர்களை கண்டுபிடித்து அனுப்புவதற்குள் 50 லட்சம் குழந்தயை பெத்து போட்ருவானுக


RRR
ஜூன் 02, 2025 18:52

வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவின் அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களின் எல்லா மூலை முடுக்குகளிலும் நீக்கமற நிறைந்துள்ளனர்... இவர்கள் அனைவரையும் கடுமையான சட்டங்கள் மூலம் எப்படியேனும் விரட்டியடித்தே ஆகவேண்டும்... வங்கதேச கள்ளக்குடியேறிகளால் இந்தியர்களுக்கும் இந்தியாவின் பொருளாதாரத்த்திற்கும் பெரும் ஆபத்து... வங்கதேச கள்ளக்குடியேறிகளை ஊக்குவிக்கும் தேசவிரோத சக்திகள் நம் நாட்டிற்கு பெரும் அபாயம்...


lana
ஜூன் 02, 2025 17:25

a.k. Anthony என்ற காங்கிரஸ் அமைச்சர் வங்கதேச மக்கள் 1 கோடி பேர் இருப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது ஒரு ஓட்டு பிச்சை. 80 களுக்கு பின்பு ஆரம்பம் அப்போ 40 லட்சம் பேர் இருந்தனர். இதுவும் காங்கிரஸ் உச்சநீதிமன்றம் இல் கொடுத்த தகவல்.


Ramesh Sundram
ஜூன் 02, 2025 16:46

20 கோடி மக்கள் இங்கே ரேஷன் கார்டு ஆதார் கார்டு voter id கார்டு வைத்துள்ளனர்


Hari
ஜூன் 02, 2025 16:18

கர்நாடக கேரளா, தமிழ் நாடு தெலுங்கானா ஆந்திர புதுச்சேரி இவை அனைத்தும் அந்நிய /உள்நாட்டு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடுள்ளது காலம் தான் இம்மாநில மக்களை காக்கவேண்டும் .


Keshavan.J
ஜூன் 02, 2025 19:45

இவைகள் அத்தனையும் எதிர் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள். பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட விட்டு விட்டிர்கள்.


RAJ
ஜூன் 02, 2025 15:41

தமிழ்நாடு அபாயகரமான தேசமா?


Rathna
ஜூன் 02, 2025 13:01

மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போலி அட்ரஸ்களை போட்டு, ஆதார் கார்டு வாங்கி திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை போன்ற பகுதிகளில் கட்டிட கூலியாள், சாயம் போடுதல், ரெடிமேட் கார்மெண்ட், செங்கல் சூளை, பிரியாணி கடை போன்ற வேலைகளின் பங்களாதேஷிகள் பலர் உள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிய உளவு வேலை பார்போருடன் சேர்ந்து நாச வேளையில் ஈடுபட அதிக சாத்தியம் உள்ளது. காவல் துறை கவனிக்க வேண்டும்.


உ.பி
ஜூன் 02, 2025 12:35

திருப்பூரில் உள்ள பங்க்ளாதேஷிங்களை எப்ப விரட்டி அடிக்க போறீங்க


Ramesh Sargam
ஜூன் 02, 2025 11:36

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இன்னும் நாடு திரும்பாத வங்க தேசம், பாக்கிஸ்தான், மியான்மார், போன்ற நாட்டு மக்களையும் துரத்தவேண்டும்.


Kumar Kumzi
ஜூன் 02, 2025 10:54

பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகள் தமிழ் நாட்டில் தான் அதிகம்


சமீபத்திய செய்தி