உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க. கூட்டணியை உடைக்க முடியாது! அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்

தி.மு.க. கூட்டணியை உடைக்க முடியாது! அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி; தி.மு.க., கூட்டணி வலிமையாக உள்ளது. யாரும் கலைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.காரைக்குடி அருகே புதுவயலில் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் தீர்மானத்தை நிறைவேற்ற அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும். லோக்சபா, ராஜ்ய சபாவில் தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை பா.ஜ.,வுக்கு கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை பா.ஜ., கொண்டு வந்தால் தோற்கடிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறாது.இவ்வாறு ப. சிதம்பரம் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
நவ 09, 2024 10:12

சீன கம்யூனிஸ்டு காங்கிரஸ் கூட்டணி விரைவில் காணாமற் போகும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 09, 2024 09:07

அடிமைகள் உருவாகுவதில்லை....உருவாக்க படுகிறார்கள்....!!!


Anonymous
நவ 09, 2024 06:41

confirm panal


கல்யாணராமன்
நவ 08, 2024 22:42

1967ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்த திமுகவை எதிர்த்து அரசியல் செய்து மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு துரும்பை கூட எந்த ஒரு காங்கிரஸ் தலைவனும் கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் தனக்கும் தன் பிள்ளை அல்லது வாரிசுக்கு பதவி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் இனியும் கட்சியில் இருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.


Ramesh Sargam
நவ 08, 2024 22:22

தினம் ஒரு உளறல் நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் நாளை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ரமேஷ் சர்கம். இனிய இரவு வணக்கம்.


தாமரை மலர்கிறது
நவ 08, 2024 22:17

உமக்கும் உமது பையனுக்கும் யாராவது தலையில் ஏறி சவாரி செய்வதே வழக்கமாகி விட்டது. திமுகவை விட்டு வெளியேவந்தால், ஒரு ஓட்டும் கிடைக்காது என்று கதறுகிறார். ஏதாவது மக்களுக்கு நல்லது செய்திருந்தால் தான், கொஞ்சமேனும் தைரியம் வரும்.


சமூக நல விருப்பி
நவ 08, 2024 21:20

திமுகவை வெளியில் இருந்து யாரும் உடைக்க வேண்டாம். ஸ்டாலினே உடைத்து விட்டார். அதாவது அரசை நடத்த நிதி நிலையை ஆராயாமல் இலவசங்களை கண் மூடித்தனமாக மக்களுக்கு கொடுத்து விட்டால் மக்கள் மயங்கி விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார். இலவசங்கள் கொடுத்த பிறகு அரசை நடத்த எல்லா வரிகளையும் உயர்த்தி விட்டால் அதை வாங்கும் திறன் மக்களுக்கு எப்படி வரும். அதை இப்போது மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திமுக அழியும் விரைவில்.


Prakash
நவ 08, 2024 21:02

Ivar UPI kooda mudiyathu endru thaan aarudam koorinaar, enna nadanthathu endru paarthome.. ippolothu Ulavar santhaiyil 5 rupaikku keerai vaanginaal, adhai kooda UPI moolam seluthugirome!


hariharan
நவ 08, 2024 21:01

இன்னும் உள்ள போகலியா?


Ramesh Sargam
நவ 08, 2024 20:44

காங்கிரஸ் கட்சி எப்படி ராகுல் காந்தியால் அழிந்ததோ, அதுபோல திமுகவும், அதன் கூட்டணியும் உதய நிதியால் சீக்கிரம் அழியும். கட்சியில் இப்ப உதய நிதிக்குத்தான் கட்சியில் உள்ள இளைஞர்கள் மிக்க ஆதரவு தருவதாக கேள்வி, அவர் அப்பனை விட்டுவிட்டு. இதுவே திமுகவின் அழிவுக்கு முதல் படி.


சமீபத்திய செய்தி