உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலையில்லாமல் இருப்பது ப.சிதம்பரமும், ராகுலும் தான்; இளைஞர்கள் அல்ல: அண்ணாமலை

வேலையில்லாமல் இருப்பது ப.சிதம்பரமும், ராகுலும் தான்; இளைஞர்கள் அல்ல: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''காங்கிரசை சேர்ந்த ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை சோமனூரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரப்படும் என மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன். விசைத்தறியாளர்களுக்கு உதவும் பவர் டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுகிறது. மக்களின் பிரச்னைகளை பா.ஜ., கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர்; அவர்கள்தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. பிரதமர் வருகை இன்னும் உறுதியாகவில்லை; முடிவானதும் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

rameshkumar natarajan
ஏப் 08, 2024 09:42

For this comment itself he will loose deposit Theres a huge unemployment in the country undefined a per capital income amongst the world undefined th position


Sathishkumar.N
ஏப் 08, 2024 09:15

ஆண்டுக்கு ரெண்டு கோடி வேலை வாய்ப்புனு சொன்னது பொய் அப்படி தானே


Sri
ஏப் 07, 2024 06:46

சரியான பதில்


venugopal s
ஏப் 05, 2024 20:16

அண்ணாமலைக்கு பெரிதாக வேலை இருப்பது போல் பேசுகிறாரே! இந்த விஷயத்தில் இவருக்கும் ராகுலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?


PREM KUMAR K R
ஏப் 05, 2024 16:38

ஹார்வார்டு பல்கலைகழகத்தில் படித்ததால் தன்னை அறிவாளியாகவும் பொருளாதார மேதையுமாகவும் எண்ணி கொண்டுள்ள ப. சிதம்பரம் அவர்களே, எவர் ஒருவர் தனக்கு வேலை அவசியம் என எண்ணம் கொண்டிருந்தால் அவருக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைத்தே வருகிறது. எனது 16-வது வயதில் உழைக்க தொடங்கிய நான் 75-வது வயதிலும் இப்போதும் வேலை பார்த்து வரும் என் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம். பலர் வேலை யில்லாமல் இருக்க மத்திய அரசோ அவர்களது பெற்றோர்களோ குற்றவாளி கள் அல்ல. இப்படி பட்ட பலர் உழைக்க தயாராக இருந்தும் மாநில அரசுகள் மாதாந்திர உதவி தொகை ஆசையை காட்டி அவர்களுக்கு வேலை தேடும் எண்ணத்தையே கை விடும் சூழ்நிலையை உருவாக்கி விட்டன. அதை நம்பியே வாழவும் பழக்கப்படுத்த பட்டு விட்டார்கள். (எந்தவொரு வேலையும் செய்யாமல் சிறுவயதில் அரசு மூலமாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு தொகையை மாதா மாதம் ஓய்வூதிய தொகை போல் தரும் உன்னதமான திட்டமானது உழைக்க எண்ணம் கொண்ட எவரையும் ஓய்வூதிய காரர்களாக மாற்றும் ஆபத்தான திட்டம்) நீதிமன்றங்கள் தலையிட்டு இவைகளை நிறுத்தா விட்டால் இளைய சமுதாயம் சீரழிந்து போய்விடும்.


Krishna Murthy A
ஏப் 05, 2024 15:54

பா சி பண்ணின தகிடுதத்தங்களால் உண்மையான ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது அதன்மீது நடவடிக்கை பா ஜ க எடுத்ததால் அனைவரும் அனைவருக்கும் பாதிப்பு மேலும் வங்கதேச போட்டியை சமாளிக்க முடியாத நிலை


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 05, 2024 15:47

இந்தியாவில் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க படும் என்று கூவி கூவி மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைத்து விட்டார்கள் பாஜக அரசு ஆகையால் இனிமேலும் மக்கள் நம்பி ஏமாற தயாரில்லை சாதி வாரி கணக்கெடுப்பு ஏழரை லட்சம் வரை உயர்கல்விக்கு கல்விக்கடன் , பழைய கல்விக்கடன் அனைத்தும் ரத்து நீட் - தேர்வு வேண்டுமா என்று அந்தந்த மாநில அரசே முடிவெடுக்க அதிகாரம் நூறு நாள் வேலை திட்டம் நானூறு ரூபாயாக உயர்வு , இருபத்து ஒரு வயதுக்கு கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ஊக்க தொகை எழுந்து நின்று கைதட்டலாம் அற்புதமான தேர்தல் வாக்குறுதிகள்


M Ramachandran
ஏப் 05, 2024 19:47

தவறு நண்பரே தமிழ்நாட்டில் தான் நிலமை அவசர நிலையய் யேட்டி உள்ளது உற்று நோக்கினால் உங்களுக்கு அது பற்றி தெளிவை தரும்


Ram pollachi
ஏப் 05, 2024 15:16

வேலையே செய்யாமல் மக்கள் பிரதிநிதிகள் லட்ச கணக்கில் சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வு ஊதியம் கொடுப்பது அரசுக்கு வீண் செலவு. பெற்றோர்கள் கண்டபடி இரண்டு மூன்று தலைமுறைக்கு சொத்தை குவித்து வைத்தால் எந்த இளைஞர்கள் வேலைக்கு போகும்? வேலைக்கு பஞ்சமில்லை உழைத்து சாப்பிட மனமில்லை ,


அப்புசாமி
ஏப் 05, 2024 14:08

உள்ளூரில் இருந்த வேலையையும் உட்டுட்டு திரிபவர் எம்.பி க்களைப் பற்றி வேலையில்லாதவங்கன்னு பேசுறாரு...


கனோஜ் ஆங்ரே
ஏப் 05, 2024 13:52

-//சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரப்படும் என மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன்/// பத்து வருஷமா என்ன சார் பண்ணிட்டிருந்தீங்க சரி அதுபோகட்டும் ///இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறது-// புளுகுறதுக்கு ஒரு எல்லையே இல்லையாய்யா? வேலைவாய்ப்பு இல்லாத காரணத்துனாலதான் இளைஞர்கள் தவறான வழிக்கு போயிட்டிருக்காங்கன்னு அய்யா நான் சொல்லல சாமி உங்க ஆட்சி ரிப்போர்ட்தான் சொல்லுது


ஆரூர் ரங்
ஏப் 05, 2024 14:59

ஜாஃபர் சாதிக்கை தொழில் அதிபராக ஆக்கி அவன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பளித்த சாதனை திராவிஷர் மாடல்.


Krishna Murthy A
ஏப் 05, 2024 15:56

அதை 10 வருடமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ட கேட்கணும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ