உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நெல் கொள்முதல்; 63 லட்சம் டன்

 நெல் கொள்முதல்; 63 லட்சம் டன்

சென்னை: விவசாயிகளிடம், நடப்பு சீசனில் கடந்த ஜூலை வரை, 63.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. கடந்த, 2025 செப்., 1ல் தொடங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன், இம்மாதத்துடன் முடிவடைகிறது. இந்த சீசனில் கடந்த ஜூலை வரை, 6.10 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 63.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் சார்பில், 16,000 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனில், 48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, நடப்பு சீசன் முடிவடைய இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால், நெல் கொள்முதல், 65 லட்சம் டன்னை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை