உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்

ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்

ராமேஸ்வரம் ': -அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளந்தனர்.இதையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் திட்டகுடி,வர்த்தகன் தெரு, சீதாதீர்த்தம் வரை சாலையில் உலா வந்து பக்தர்களுக்குபடியளந்து அருளாசி வழங்கினர். ஏராளமானோர் தரிசித்தனர்.மதியம் 12:00 மணிக்கு சுவாமி, அம்மன்கோயிலுக்கு திரும்பினர். இதனால் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை கோயில் நடை மூடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ