உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைர வேலுடன் பழனி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்

வைர வேலுடன் பழனி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் சிவகங்கை மாவட்ட நகரத்தார் காவடி குழுவினர் வைரவேலுடன் நேற்று நத்தத்தை கடந்து சென்றனர். அவர்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கி மக்கள் வரவேற்றனர். பழனி தைப்பூசத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனுார் நாட்டுக்கோட்டை நகரத்தார் கள் பல ஆண்டு களாக பாரம்பரியத்துடன் காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்தாண்டு பிப்., 2ல் தேவகோட்டையில் புறப்பட்ட இக்குழுவினர் நேற்று காலை நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்தனர். அங்கு தரிசனம் செய்த பின்னர் பழனி புறப்பட்டனர். வழக்கமாக கொண்டு வரும் வைர வேலையும் கொண்டு சென்றனர். பல்வேறு அமைப்பினர் இக்குழுவினருக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sridhar
பிப் 08, 2025 17:49

கூடவே ஹிந்து உணர்வும் இருக்கட்டும். கோவிலுக்கு போகும் எல்லோரும் திமுகவை புறக்கணிக்க வேண்டும்.


CHELLAKRISHNAN S
பிப் 08, 2025 12:40

I am a brahmin but I undertook this padayatra several times when I was young.


naurth karwinkar
பிப் 08, 2025 11:36

இதுல ஒருத்தர்கூட பிராமண இருக்கமாட்டார்


Sudhakar
பிப் 08, 2025 17:03

அதுக்கு என்ன இப்போ


sridhar
பிப் 08, 2025 17:48

செய்தியை நல்லா படி. நகரத்தார் என்று போட்டிருக்கு , அதில் ப்ரஹ்மனர் எப்படி வருவார். மனம் பூரா விஷம்.


M. PALANIAPPAN
பிப் 08, 2025 10:14

பல ஆண்டுகாலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு, காவடியை தோளில் சுமந்து கொண்டு நடந்து வரும் காட்சி ஒரு தனி அழகு


சமீபத்திய செய்தி