மேலும் செய்திகள்
பாரதி கல்விக் குழும இல்ல திருமண வரவேற்பு விழா
02-Jun-2025
பொள்ளாச்சி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் - பாக்கியலட்சுமி, ஜோதிலட்சுமி தம்பதியரின் மகன் பிரவின், கோகுலகிருஷ்ணன் - பிரியா தம்பதியரின் மகள் கவுசிகமித்ரா ஆகியோரது திருமண வரவேற்பு விழா, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி வேல் மஹாலில் நேற்று நடந்தது.விழாவில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதேபோல, மகாராஷ்டிரா கவர்னர் சி.பி., ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உதயகுமார், ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.தவிர, பொள்ளாச்சி நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.
02-Jun-2025