உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு

பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு

சென்னை : 'அ.தி.மு.க., கோழைகள் வேண்டுமானால், பா.ஜ.,விற்கு பயந்து, அடிபணியலாம். ஆனால், தி.மு.க., அரசை அசைத்து பார்க்க முடியாது' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vr81mcfr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'டாஸ்மாக் விசாரணைக்கு பயந்து தான், 'நிடி ஆயோக்' கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.

கள்ளக்கூட்டணி

பா.ஜ.,வோடு நேரடி கூட்டணி இல்லாமல், கள்ளக்கூட்டணி காலத்தில் கூட, பா.ஜ.,வுக்கு பயந்த பயந்தாங்கொள்ளி தானே பழனிசாமி. அ.தி.மு.க.,வின் தீர்மானங்களில் கூட மோடியையோ, மத்திய அரசையோ கண்டிக்காமல், வலியுறுத்துகிறோம் என்ற வார்த்தையை போட்டு தப்பித்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி.அவருக்கு மோடி என்றால் பயம்; அமித்ஷா என்றால் பயம்; அமலாக்க துறை என்றால் பயம்; சி.பி,ஐ., என்றால் பயம்; கவர்னர் பயம், ரெய்டு பயம், தேர்தல் ஆணையம் பயம், இரட்டை இலை சின்னம் பயம், இப்படி எல்லாவற்றுக்கும் பயந்து, பா.ஜ.,வோடு கூட்டணி சேர்ந்தவர் தான் பழனிசாமி.புலிக்கு பயந்தவர்கள் எல்லாம், என் மீது படுங்கள் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ஊருக்குள் புலி வந்ததும், எல்லாரும் ஓடினர். பெரிய வீரனை போல் பேசிய ஒருவன், 'என் மீது படுத்து கொள்ளுங்கள் நான் காப்பாற்றுகிறேன்' என்றானாம். அந்த புலிப்பாண்டி தான் பழனிசாமி.

சித்து விளையாட்டு

முதுகெலும்பில்லாத அ.தி.மு.க., கோழைகள் வேண்டுமானால், பா.ஜ., சித்து விளையாட்டிற்கு பயந்து, பா.ஜ.,வை ஆதரித்து அடிபணியலாம். ஆனால், ஒருக்காலமும் தி.மு.க., அரசை துரும்பளவு கூட அசைத்து பார்க்க முடியாது என்பதை, பயந்தாங்கொள்ளி பழனிசாமிக்கு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 27, 2025 09:09

புலிப்பாண்டி பழனிச்சாமி, பெயர் நன்றாகவே இருக்கிறது!


Tc Raman
மே 26, 2025 17:18

தி மு க போதை வ்யாபாரிகளுக்ககும் தீவிரவாதிகளுக்கும் தான் அடிபணியும்


shyamnats
மே 26, 2025 16:15

இவ்வளவு உதார் விடுகிறவர் , தி மு க வை துணை இல்லாம தனித்து நின்று தேர்தலில் போட்டியிட சொல்லலாமே. அடுத்தவருக்கு மட்டும் விமரிசனம்.


Nallavan
மே 26, 2025 13:19

கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வருக்கு அழைப்பு, முதல்வர் சென்று வந்திருக்கிறார், இதுக்கு வெள்ள கொடி புடிக்கிறாரு, பம்முறாறு , அசதுரானுக நன்மை பாசக்கார பய புள்ளைங்க


Sathyan
மே 26, 2025 11:44

இவனை எல்லாம் மக்கள் ஓட்டு போட்டு MLA வ நிக்க வச்சிருக்காங்களே, அந்த ஓட்டு மக்களை முதலில் உதைக்கணும். நாட்டின் மீது எவருக்கும் அக்கறை இல்லை, சுயநலவாதிகளா இருக்கானுங்க.


GoK
மே 26, 2025 11:02

இந்த ஆள் நெற்றியில் இருக்கும் திருநீறு, குங்கும மொட்டை அளிக்கத் திராணி இல்லை சநாதனத்தை மலேரியா போல அழிப்பானாம் வெட்கங்கெட்ட மடையன்


Anand
மே 26, 2025 10:35

பழனிசாமி அடிபணியலாம், ஆனால் நாங்கள் சுயமரியாதையை உயிர் மூச்சாக கொண்டவர்கள் அது எங்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது அடிபணியமாட்டோம் சாஷ்டாங்கமாக காலில் விழுந்துவிடுவோம்...


vbs manian
மே 26, 2025 10:00

ஆமாம் டெல்லி விஜயத்தை பார்த்தாலே தெரிகிறது.


S.L.Narasimman
மே 26, 2025 08:06

இப்படி உசுப்பிவிட்டு விடியலின் பேமிலியை வழக்குகளில் சிக்க வைக்க நல்லாவே அவிக மந்திரிகள் வேலைசெய்கிறார்கள்


Kjp
மே 26, 2025 07:59

பழைய திமுக வரலாறு பற்றி தெரிந்தும் உருட்டுகிறார்.காங்கிரஸ் கட்சிக்கு திமுக அடி பணிந்துதான் பழக்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை