உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம்ப வைத்து முதுகில் குத்திய பழனிசாமி பிரேமலதா கொந்தளிப்பு

நம்ப வைத்து முதுகில் குத்திய பழனிசாமி பிரேமலதா கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில், தே.மு.தி.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்றார்.கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: கட்சிக்காக பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கட்சி வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தோம். ஐந்து லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் உறுதி அளித்தனர். சொன்னபடி லோக்சபா தேர்தலில் போட்டியிட ஐந்து சீட் கொடுத்தனரே தவிர, ராஜ்யசபா சீட் தரவில்லை. இப்படி முதுகில் குத்தியவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. தேர்தலுக்கு முன் பேசிய பேச்சு, தேர்தலுக்குப் பின் மாறிவிட்டது. முதல்வராக இருந்தவர், கட்சித் தலைவராக கொடுத்த வாக்குறுதிபடி நடப்பார் என நம்பினோம். ஆனால், அவர் அதை செய்யவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில், கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோல், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் ஏற்படுத்திய போது, அதில் தேதி குறிப்பிட வேண்டாம் என பழனிசாமி கேட்டுக் கொண்டார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். நம்பிக்கை அடிப்படையில் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஆனால், ஏமாற்றப்பட்டு விட்டோம். அதனால் தான், பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல மறுக்கின்றனர்; சந்தேகம் கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

காசு கொடுத்து கூட்டப்படும் கூட்டம்

பழனிசாமி, தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டிருக்கிறார். போகுமிடமெல்லாம் மக்கள் அலைகடல் என திரளுவதாக ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால், கூட்டப்படும் கூட்டம் காசு கொடுத்து வரவழைக்கும் கூட்டம். இப்படி பல தலைவர்களை, இந்த தமிழகம் ஏற்கனவே பார்த்து விட்டது.அ.தி.மு.க., மட்டுமல்ல; அனைத்துக் கட்சியினரும் காசு கொடுத்துத்தான் கூட்டத்துக்கு ஆட்களை திரட்டி வருகின்றனர். ஆனால், தே.மு.தி.க.,வில் அப்படி ஒரு நாளும் செய்தது இல்லை; செய்யவும் மாட்டோம். முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் போயுள்ளார்; அவருக்கு வாழ்த்துகள். பயணம் உபயோகமாக இருக்க வேண்டும். பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Oviya Vijay
செப் 01, 2025 20:42

உங்கள் பேச்சிலிருந்து உங்களின் நகர்வு திமுகவை நோக்கி இருக்கிறது என்பதை உணர முடிகிறது... 2021 லேயே இந்த முடிவை எடுத்திருந்தால் தற்போது கைவசம் சில எம்எல்ஏக்களாவது இருந்திருப்பர்... ஆனால் என் விருப்பம் என்னவெனில் உங்களை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் உங்கள் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும்... நீங்கள் பேசும் பேச்சு அப்படி... நீங்கள் அரசியலில் இருப்பதற்கே லாயக்கு அற்றவர்... நீங்கள் இடம்பெறும் கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் என்று ஒரே டயலாக்கை கீறல் விழுந்த ரெகார்ட் போல ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டே உள்ளீர்கள்... அது பலமுறை பொய்த்தது தான் மிச்சம்... மேலும் நீங்கள் இடம்பிடித்தால் தான் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்ற நிலையில் அக்கூட்டணி இல்லை... அதன் வெற்றி என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... நீங்கள் அந்த வெற்றியை பங்கு போட்டுக்கொள்ள நினைக்கிறீர்கள்... அவ்வளவே...


SJRR
செப் 01, 2025 16:25

தவெக வில் ஆட்சியில் பங்குகொடுக்க தயாராக இருக்கிறார் அக்கட்சியின் தலைவர். ஆகவே, போகிறபோக்கில் எல்லோரையும் ஏதாவது குறை சொல்லிவிட்டு அங்கே போய் செட்டில் ஆகற பிளான்.


G Mahalingam
செப் 01, 2025 14:50

அப்போ திமுக கூட்டணியில் தேதிமுக என்று ஊர்ஜிதம் ஆகிறது.


Oviya Vijay
செப் 01, 2025 14:16

வெற்றி என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... நீங்கள் அந்த வெற்றியை பங்கு போட்டுக்கொள்ள நினைக்கிறீர்கள்... அவ்வளவே...


pakalavan
செப் 01, 2025 13:54

தூக்கி சுமக்க யாரும் தயாரில்லை


pakalavan
செப் 01, 2025 12:00

எடப்பாடிக்கு ஒரு தகுதியும் இல்லை, எடப்பாடிக்கு அரசியலில் தனியாக ஒரு அருகதையும் இல்லை,


saravan
செப் 01, 2025 10:51

ஏய் இந்த பாப்பாவுக்கு நாலு லாலிபாப் வாங்கி கொடுங்கப்பா அரசியல் பேசி உசுர வாங்குது


Natchimuthu Chithiraisamy
செப் 01, 2025 10:14

கடைசியில் திமுகவிடம் ஒட்டுவது இருப்பதை இழப்பதற்கு தான் நன்றாக தெரிகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 01, 2025 10:10

இவர் திமுக கூட்டணியில் சேர முடிவெடுத்தது சரிதான். ஆண்டவருக்கு கொடுத்தது போல இவருக்கும் ஒரு ராஜ்ய சபை சீட்டைக்கொடுத்துவிட்டு கட்சிக்கு திவசம் பண்ணிவிடுவார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 01, 2025 10:08

அரசியல் உலகமே ஒரே ஒரு ராஜ்ய சபை சீட்டுக்குள்தான் இருக்கிறது


சமீபத்திய செய்தி