உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி பயணம்; நடுக்கத்தில் ஸ்டாலின் உதயகுமார் கிண்டல்

பழனிசாமி பயணம்; நடுக்கத்தில் ஸ்டாலின் உதயகுமார் கிண்டல்

மதுரை : ''நீதி கேட்டு பழனிசாமி மேற்கொண்டு வரும் பயணத்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது'' என அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மக்களிடத்தில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டு, தலைமைச் செயலகத்தில் நான்கு துறைகளின் முதன்மை செயலர்களை அழைத்து நான்கரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நான்காண்டுகளில் துாங்கிக் கொண்டிருந்த ஸ்டாலின், களத்தில் பழனிசாமிக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து வயிற்றிலே புளியைக் கரைத்தது போல உள்ளார்.அதிகாரிகளிடம் 'எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றதா. சென்றடையவில்லையா' என்று கேட்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் மாணவர்களுக்கு 14 வகை உபகரணங்கள், மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டங்கள் எல்லாம் எங்கே போனது. கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்திருப்பது யாரை ஏமாற்ற. இளைய சமுதாயம் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை நீங்கள் பறித்து விட்டீர்கள். தாலிக்கு தங்கத்தை பறித்து விட்டீர்கள். கறவை மாடுகள், ஆடுகள் திட்டத்தை பறித்து விட்டீர்கள். உங்கள் ஆட்சி அதிகாரத்தை மக்கள் பறிக்க தயாராகி விட்டார்கள்.அரசு ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் கிணற்றில் போட்ட கல்லாக தான் உள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் 25 பேரை விசாரணை என்கிற பெயரில் படுகொலை செய்தது தி.மு.க., ஆட்சி. இதற்கெல்லாம் நீதி கேட்டு பழனிசாமி பயணத்தை மேற்கொண்டு உள்ளார். உங்களின் குடும்ப ஆட்சிக்கு, ஹிட்லர் ஆட்சிக்கு முடிவு கட்டுவார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mario
ஜூலை 10, 2025 09:09

கோயில் காசில் கல்லூரி


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 08:52

ஐயோ வயிற்றில் புளியை கரைகிறீர்களே? 1975 ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது வைச்சு வச்சு செய்தீர்களே.. திருப்தி இலையா ? ஜெயாம்மா ஆட்சியில் நள்ளிரவு கைது செய்ததில் ..ஐயோ கொல்றங்களே என்று கதறினோமே .திருப்தி இலையா ? இன்னும் நாங்கள் நடுங்கணுமா ..என்னொரு கொடூர சிந்தனை ...


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 07:56

என்னது நடுக்கமா, சிரிக்குறார் பாருங்க, அவர்களிடம் லட்சம் கோடி சொத்துக்களும், அதற்குண்டான ஊடகங்களும், தமிழக மக்களின் மறக்கும் தன்மையும் அதிகம் இருக்கின்றன. அதோட செந்தில் பாலாஜி , பொன்முடி , ஜாபர் சாதிக், வீரமணி போன்ற அக்யுஸ்ட்டுகளும் உள்ளார்கள் , நீங்க என்னடான்னா காமெடி பண்ணிக்கிட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை