உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி

மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவனை சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியார் பள்ளி வழக்கம் போல் இன்று காலை செயல்பட தொடங்கியது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m2efeo2f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, 8ம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றுள்ளார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டப்பட்ட ஆசிரியரும் மருத்துவமனையில் உள்ளார்.அரிவாளால் வெட்டிய மாணவன் பின்னர், பாளையங்கேட்டை போலீசிடம் சரண் அடைந்தான். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவருக்கும், வெட்டுப்பட்ட மாணவருக்கும் இடையே 4 நாட்கள் முன்பாக பென்சில் கொடுப்பது தொடர்பான பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று(ஏப்.15) பள்ளி திறக்கப்பட்டதும், அரிவாளுடன் வகுப்பறைக்கு வந்த மாணவன் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

உத்தரவு

இச்சம்பவத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளை போல், தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் பைகளை பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

RAMAKRISHNAN NATESAN
ஏப் 15, 2025 19:12

ஒரு ஸ்கூல்ல ஒரு மாணவன் இன்னொரு மாணவனை வெட்டிட்டான் .... அதோட தடுக்க முயற்சி பண்ணுன ஆசிரியரையும் வெட்டிட்டான் .... இவங்கள்ல யாருக்கும் இன்னும் பேரு வைக்கல .... அவ்வளவு ஏன் ஸ்கூலுக்கும் பேரு வைக்கல ....


எவர்கிங்
ஏப் 15, 2025 18:29

சிறார் சீர்திருத்தப் பள்ளி விரைவில் விடுதலை கட்சிப் பதவி ஜாலியோ ஜாலி


எவர்கிங்
ஏப் 15, 2025 18:27

நடப்பது விடியல் திராவிடியா மூஞ்சி ஆட்சி


HoneyBee
ஏப் 15, 2025 17:25

அந்த இரும்பு கரம் எங்க சுடலை.கொஞ்சம் காட்டுங்க. சினிமாவின் தாக்கம் ஹீரோயிசம் இந்தளவுக்கு நாசம் செய்து கொண்டுள்ளது‌...


கண்ணன்
ஏப் 15, 2025 17:09

அது என்ன தனியார் பள்ளி?


ஆரூர் ரங்
ஏப் 15, 2025 16:20

எல்லாத்துக்கும் கவர்னர் தான் காரணம். கு‌ற்றவா‌ளி ன்னு கூட முடிவு வரலாம். எந்த கொம்பனாலும் குறை கூற முடியும் ஆட்சி.


theruvasagan
ஏப் 15, 2025 16:07

சட்டம் ஒயிங்கு நிர்வகிப்பதில் மாடல் அரசு அகில உலக அளவில் நம்பர் ஒன்.


R.MURALIKRISHNAN
ஏப் 15, 2025 15:40

சர்வாதிகாரியை வரும் தேர்தலில் அகற்றினால் விடியல் வரும்.


raja
ஏப் 15, 2025 14:52

சூப்பர் மாடல் அரசு


sridhar
ஏப் 15, 2025 14:32

வெட்டப்பட்டவன் இஸ்லாமியன், வெட்டியவன் கிறிஸ்துவன் . பாவம் திமுக .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை