உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் ரயில் பாலம் குறைபாடுகள் சரி செய்யப்படும்: பொதுமேலாளர் உறுதி

பாம்பன் ரயில் பாலம் குறைபாடுகள் சரி செய்யப்படும்: பொதுமேலாளர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: 'பாம்பன் கட்டுமானப் பணியில் எந்த குழப்பமும் இல்லை; பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ள குறைபாடுகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்' என தெற்கு ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியும், இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்டமாக திறந்து மூடும் சோதனையும், பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்தது. பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளித்ததுடன், பாதுகாப்பு தொடர்பாக சில கருத்துக்களை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தன் அறிக்கையில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விசாரிக்க, ஐந்து பேர் குழுவை ரயில்வே அமைச்சகம் நியமித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. ரயில் சேவையைத் துவங்க பாதுகாப்பு கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். பாம்பன் பாலத்தில் உள்ள குறைபாடுகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்பட்டு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்வேயிடம் எம்.பி.,க்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சாண்டில்யன்
நவ 29, 2024 21:08

இந்த பாம்பன் பாலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென அதிருப்தி தெரிவிக்கிறார் பாதுகாப்பு கமிஷனர் இவர் ரயில்வேக்காரர் இல்லை. இந்த கவலை ரயில் பயணிகளுக்கும் உண்டுதானே காசை போட்டு கட்டிய பாலம் நூறாண்டு பலமாக இருக்க வேண்டுமே என்ற கவலை தேச பக்தர்களுக்கும் இருக்க வேண்டிய ஒன்றுதான் அல்லவா


சாண்டில்யன்
நவ 29, 2024 18:45

அதிகார போதையில் ட்ரைவர் கார்டு ராமேஸ்வரம் ஸ்டேஷன் மாஸ்டர் யார் பேச்சையும் கேட்காமல் வீம்புக்கு உத்தரவு போட்டு தனுஷ்கோடியில் ஒரு முழு ரயிலையும் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் கடலுக்கு காவு கொடுத்தார் ஒரு மதுரை கண்ட்ரோலர்.அவருக்கு உடனடியாக பதவி உயர்வு கொடுத்தது ரயில்வே நிர்வாகம் பிறகு அவர் ஊழியர்களுக்கு கொடுத்த குற்ற பத்திரிகைகள் எண்ணிலடங்கா என்பது வரலாறு. இன்று ரயில்வே அதிகாரிகள் யார் பெரியவர் என்று ரூட்டு தல போல சண்டையிட்டுக் கொண்டு ரயில் பயணிகளை காவு வாங்காமலிருந்தால் சரி என்பதே நம் கவலை


Sidharth
நவ 29, 2024 16:04

இதையே தமிழ் நாடு ராசு பண்ணிருந்தா பொங்கி தீர்த்துருக்கும் ஒரு வருசத்துக்கு


Kasimani Baskaran
நவ 29, 2024 16:04

பள்ளிக்கூரை கூட ஒழுங்காக கட்ட துப்பில்லாத திராவிட மேதைகள் இதை தங்கள் அடிமை திலகங்களை வைத்து அறிக்கை விட்டு இன்பம் காண்கிறார்கள்.


S.Martin Manoj
நவ 29, 2024 16:01

முட்டு கொடுக்கணும் ஆனா எல்லாத்துக்கும் முட்டு கொடுக்க கூடாது இரயில்வே பாதுகாப்பு ஆணையர் குவாலிட்டியே இல்ல அதன் தாங்கு திறன் 35% குறைஞ்சிடுசி பாலம் துறுபிடிக்க ஆரம்பிச்சிருச்சி ன்னு சொல்லிபுட்டாரு .


தமிழரசன்,விழுப்புரம்
நவ 29, 2024 17:21

ஓ... சேகர்பாபு டிரெனிங்கா? அடிச்சிவிடு அடிச்சிவிடு கண்ண மூடிட்டு அடிச்சுவிடு.


Nandakumar
நவ 29, 2024 15:16

மாடர்ன் உலகில் எவ்வளவு அழகாக வடிவமைக்கலாம்? மற்ற நாடுகளை பார்த்து கூட இவர்களுக்கு அறிவு வரவில்லை. பார்க்கவே கன்றாவியாக இருக்கிறது.


சந்திரன்,போத்தனூர்
நவ 29, 2024 17:18

அடிமைப் புத்தி உன்னை விட்டு இன்னும் அகல வில்லை! பாவம் உன்னைச் சொல்லி குற்றமில்லை எல்லாம் அந்த பகுத்தறிவு ஈரவெங்காய தாடிதான்.....


Sudhakaran J. G
நவ 29, 2024 18:04

நாடின் வளர்ச்சிப்பாதையில் இதுவமொன்று இத்துவமொன்று


karthik
நவ 29, 2024 15:05

பொது போக்குவரத்துக்கு அனுமதிப்பதற்கு முன்பு ஆய்வு நடத்தப்படுவதும் அதன் மூலம் சில பரிந்துரைகள் செய்யப்படுவதும் பொதுவான வழக்கமான ஒன்று தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை