உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பண்ருட்டி அருகே ஊராட்சி செயலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பண்ருட்டி அருகே ஊராட்சி செயலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஊராட்சி செயலாளரின் உடல் சடலமாக மீட்பு, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள அண்ணாகிராமம் ஒன்றியம் நரிமேடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வந்தவர் அய்யனார் (52). இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பணிக்கு வந்த அய்யனார் மதியம் உணவு சாப்பிட கூட செல்லாமல் தனிமையில் இருந்து உள்ளார் இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் மூடி கிடந்த நிலையில் வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அலுவலகத்திற்கு வந்திருந்த சக ஊழியர் ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஊராட்சி செயலாளர் அய்யனார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி செயலாளர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 24, 2025 18:41

இவரு தொங்கறதுக்கு முன்னாடி மேசையில் கள்ளக்குறிச்சி பாக்கெட்டை வச்சுட்டு தொங்கி இருந்தா இந்நேரம் பத்து லட்சம் கிடைச்சிருக்கும்


சமீபத்திய செய்தி