| ADDED : மார் 17, 2024 07:28 AM
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறதுபழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவை தொடர்ந்து மார்ச் 19 முதல் மார்ச் 27 வரை காலை சுவாமி கிரிவீதி உலா நடக்கிறது. தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, ஆறாம் நாளான மார்ச் 23 ல் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.பங்குனி உத்திர தினமான மார்ச் 24 மாலை தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் , மார்ச் 27 இரவு 7:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதியில் திரு உலா காட்சி, இரவு கொடி இறக்குதல் நடக்க ,தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.
பழநியில் நாளை துவக்கம்
பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறதுபழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவை தொடர்ந்து மார்ச் 19 முதல் மார்ச் 27 வரை காலை சுவாமி கிரிவீதி உலா நடக்கிறது. தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, ஆறாம் நாளான மார்ச் 23 ல் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.பங்குனி உத்திர தினமான மார்ச் 24 மாலை தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் , மார்ச் 27 இரவு 7:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதியில் திரு உலா காட்சி, இரவு கொடி இறக்குதல் நடக்க ,தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.