உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்ட் 2 எப்பவும் பெயிலியர் தான்

பார்ட் 2 எப்பவும் பெயிலியர் தான்

சென்னை: “வரும் 2026ம் ஆண்டு, 'தி.மு.க., அரசின் 2.0' என, முதல்வர் கூறினார்; தமிழகத்தில் எப்பவுமே, 'பார்ட் 2' தோல்வி தான்,” என, எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்: ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், சபையில் உறுதியோடு சொல்கிறேன். தமிழகத்திற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின், 'பார்ட் 1'. வரும் 2026ம் ஆண்டு, 'வெர்ஷன் 2.0 லோடிங்'. அதில் இன்னும் பல சாதனைகளை படைப்போம்; தமிழகம் வரலாறு படைக்கும்.எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார்: ஒரு அரசு நிமிர்ந்து நிற்கிறதா, தலைகுனிந்து நிற்கிறதா என்பதற்கு, மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.சபாநாயகர் அப்பாவு: மக்கள் தீர்ப்பு அளித்துதான், இங்கு வந்து அமர்ந்திருக்கின்றனர்.உதயகுமார்: 'கடந்த கால அரசு நிர்வாகம் ஊர்ந்து கிடக்கும் நிலையில் இருந்தது' என, முதல்வர் பதிவு செய்துள்ளார். மேலும், பார்ட் - 1, பார்ட் - 2 என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். எப்போதுமே பார்ட் - 2 'பெயிலியர்' ஆகியுள்ளது. 'ஊர்ந்து சென்ற' என்ற வார்த்தையை, சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.முதல்வர்: ஊர்ந்து சென்றதற்கு பதிலாக, தவழ்ந்து என்று இருக்கட்டும்.சபாநாயகர்: தவழ்ந்து என்பது குழந்தை தவழ்ந்து செல்வதை குறிக்கும்; நல்ல வார்த்தை. முதல்வர்: தவழ்ந்தோ, ஊர்ந்தோ... அது சபையில் தடை செய்யப்பட்ட வார்த்தை இல்லை.சபாநாயகர்: ஒரு நிர்வாகம் ஆரம்ப கட்டத்தில் இருந்ததை தான் முதல்வர் சொன்னார். அது சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை இல்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ