மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
5 hour(s) ago | 33
நாமக்கல் : பிரதமர் மோடி, மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இதை தமிழில் மொழிபெயர்த்து, நாமக்கல் நகர பா.ஜ., சார்பில், நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஒளிபரப்பு செய்தனர். இந்நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது: 'இண்டியா' கூட்டணி மக்களை குழப்பும் கூட்டணி. அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தற்போது, பீஹாரில் நிதீஷ்குமாரும்கூட்டணியை மாற்றிஉள்ளார்.தமிழகத்தில், 'இண்டியா'கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வெளியேற தயாராகி வருகின்றன. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அகில இந்திய அளவில், 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 3
5 hour(s) ago | 33