உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் சிறப்பு  ரயில்களை  இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் சிறப்பு  ரயில்களை  இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

மதுரை : கோடை விடுமுறை முடிவடையவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்குகூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த தென் மாவட்ட பயணிகள் மீண்டும் சென்னை, பெங்களூரு, கோவைக்கு திரும்ப போதிய ரயில்கள் இல்லை. வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ளன.சென்னை செல்லும்குமரி, நெல்லை, திருச்செந்துார், அனந்தபுரி, குருவாயூர் ரயில்கள், திருநெல்வேலி, நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்கள்ஆகியவற்றில் காத்திருப்போர் பட்டியல் நுாறுக்கும் மேல் உள்ளன.பெங்களூரு வழித்தடத்தில் நாகர்கோவில் - பெங்களூரு, திருநெல்வேலி - தாதர் (11022), கோவை வழித்தடத்தில் நாகர்கோவில் - கோவை (22667) ரயில்களில் ஜூன் 2வது வாரம் வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளன.செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை, சிலம்பு, கொல்லம், தாம்பரம் ரயில்கள், துாத்துக்குடி - சென்னை 'முத்துநகர்', துாத்துக்குடி - மைசூருஎன அனைத்திலும் காத்திருப்போர் பட்டியலே நீடிக்கின்றன.

சிறப்பு ரயில்கள் அவசியம்

குமரி - மும்பை (01006), ஜூன் 1 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030), நாகர்கோவில் - தாம்பரம் (06012),கொச்சுவேலி - தாம்பரம் ஏ.சி.,(06036) ஆகிய சிறப்பு ரயில்களிலும்காத்திருப்போர் பட்டியல் தொடர்கிறது.சர்வர் பிரச்னையால் தட்கலிலும் முன்பதிவு செய்ய முடியாமல்பயணிகள் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையுள்ளது. குமரி - சென்னை இரட்டை ரயில்பாதை பணி முடிந்துள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.அவர்கள் கூறுகையில் 'கோடை விடுமுறை விரைவில் முடிவடையவுள்ள நிலையில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு இல்லை. செங்கோட்டை, துாத்துக்குடியில் இருந்து சென்னைக்குசிலரயில்களே உள்ளதால் எளிதில் டிக்கெட் கிடைப்பதில்லை. திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் திருநேல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி