உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடற்கரை-செங்கை ஏசி மின்சார ரயில் அட்டவணை மாற்றம் கோரும் பயணியர்

கடற்கரை-செங்கை ஏசி மின்சார ரயில் அட்டவணை மாற்றம் கோரும் பயணியர்

சென்னை: சென்னையில் இயக்கப்படும் புறநகர், 'ஏசி' ரயிலில், பயணியர் வசதிக்கு ஏற்ப கால அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, 12 பெட்டிகள் கொண்ட, 'ஏசி' ரயிலில், அமர்ந்தபடி 1,116 பேர், நின்றபடி 3,798 பேர் என, 4,914 பேர் பயணிக்கலாம்.இந்த 'ஏசி' ரயில் கடந்த 19ம் தேதி, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் சேவையை துவக்கியது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00, பிற்பகல் 3:45 மற்றும் இரவு 7:35 மணிக்கு புறப்படும் ரயில், முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது செங்கல்பட்டில் இருந்து காலை 9:00, மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு வந்தடையும். தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில், காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.இந்த ரயில் சேவைக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், அதிக அளவில் பயணியர் பயன்பெற, கால அட்டவணையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, ரயில் பயணியர் சங்கங்களின் நிர்வாகிகள் பாஸ்கர், முருகையன் ஆகியோர் கூறியதாவது: சென்னையில் முதல் முறையாக, 'ஏசி' மின்சார ரயில்சேவை துவங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. தற்போதுள்ள கால அட்டவணையில், சில மாற்றங்களை செய்ய வேண்டும்.காலை 7:45 மணிக்கு கடற்கரையில் புறப்படும் முதல் சேவையை, செங்கல்பட்டில் இருந்து துவக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தென்மாவட்ட விரைவு ரயில், சென்னை நோக்கி வரும் போது, பயணியர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இறங்கி, இந்த 'ஏசி' ரயிலில் பயணிக்க முடியும். தற்போது காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் மட்டுமே 'ஏசி' ரயில் செல்கிறது. இதை மாற்றி, வெயில் அதிகமாக இருக்கும் மதிய நேரங்களிலும் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும். அதுபோல், சென்ட்ரல் - ஆவடி - அரக்கோணம் தடத்திலும், புறநகர், 'ஏசி' ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பயணியர் விருப்பப்படி மாற்றம்சென்னையில் ஓடும் முதல், 'ஏசி' மின்சார ரயில் சேவை குறித்தும், மேம்பாடு குறித்தும், பயணியரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பயணியர் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து, கால அட்டவணை மாற்றம் உள்ளிட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது மின்சார, 'ஏசி' ரயில் வரும்போது, அரக்கோணம் தடத்தில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.- தெற்கு ரயில்வே அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தத்வமசி
ஏப் 22, 2025 09:38

ரயில் நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள். குழு என்று ஒன்றை வைத்துக் கொண்டு அவர்களின் விருப்பப்படி ரயில் இயக்க வேண்டும் என்று பலர் பல விதமாக கூறுவார்கள். கடந்த மூன்று நாட்களாக பயணித்து வருபவர்களில் இவர்கள் யாரும் கிடையாது. இவர்களின் வசதிக்கு ரயில் விட கோரிக்கை விடுப்பார்கள். பிறகு ஆட்கள் காணாமல் போய் விடுவார்கள். இவர்களால் எந்த பயனும் கிடையாது. தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பயணித்து வருகிறேன். இதில் அதிகம் பயணிப்பவர்கள் தினப்படியாக பயணிக்கும் மிஸ்டர் பொது ஜனம், மற்றும் ஏசி ரயில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுபவர்கள். மிஸ்டர் பொது ஜனத்திற்கு இந்த ரயிலின் நேரம் அட்டவணை, கட்டணம் இன்னும் சரியாக சென்று சேரவில்லை. இதற்கு அந்த குழுக்கள் என்ன செய்தார்கள் ? நீங்கள் யாரையும் கேட்க வேண்டாம். உங்களிடம் எண்ணிக்கை இருக்கிறது. எந்த வழித்தடத்தில் எந்த நேரத்தில் விட்டால் மக்கள் வருவார்கள் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 22, 2025 08:46

ஏசி மின்சார ரயில் சேவை குறித்தும், மேம்பாடு குறித்தும், பயணியரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பயணியர் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து, கால அட்டவணை மாற்றம் உள்ளிட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையை அறிமுகப் படுத்துவதற்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டும் அல்லவா? சங்ககால மன்னர்கள் அதைத்தான் செய்தார்கள்.


VENKATASUBRAMANIAN
ஏப் 22, 2025 07:35

நமக்கு சம்பளம் உயரனும் ஆனால் பேருந்து ரயில் கட்டணம் உயரக்கூடாது பெட்ரோல் டீசல் விலை குறையும். ஆனால் டயர் விலை ஊதியம் காரணம் சொல்லி கட்டணம் குறைக்க மாட்டோம்.


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 05:34

டிக்கட் மட்டும் அஞ்சு ரூபா இருக்கணும் ..


வாய்மையே வெல்லும்
ஏப் 22, 2025 07:50

பேசாம ரயிலை படகுல வெச்சு தொனியை சுழற்றினால் ஐந்து ரூபாய்க்கு செல்லலாம் ..போகிற வழியில் மீனை பிடிச்சி லபக் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை