உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தான் புகுந்து விட்டதாக கருதி பெற்ற குழந்தைகளை தாக்கிய போதகர் கைது

சாத்தான் புகுந்து விட்டதாக கருதி பெற்ற குழந்தைகளை தாக்கிய போதகர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சாத்தான் புகுந்து விட்டதாக கூறி மூன்று குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தையான கிறிஸ்தவ மத போதகர் கிங்ஸ்லி கில்பர்ட்டை 45, போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே புல்லத்துவிளை குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிப்பவர் கிங்ஸ்லி கில்பர்ட் 45. மதபோதகர். மனைவி சஜினி.இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் மகன்கள், 8 மாதத்தில் மகள் உள்ளனர். கிங்ஸ்லி கில்பர்ட் அந்த பகுதியில் உள்ள சபைகளில் போதனைகளை செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு கிங்ஸ்லி கில்பர்ட் வீட்டில் இருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது. நீண்ட நேரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கருங்கல் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் சென்று நீண்ட நேரம் நேரம் கழித்து கிங்ஸ்லி கில்பர்ட் கதவை திறந்தார். மூன்று குழந்தைகளையும் கயிற்றால் கட்டி கொடூரமாக அவர் தாக்கியது தெரியவந்தது. ஒரு குழந்தைக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து கிங்ஸ்லி கில்பர்டை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: கிங்ஸ்லி கில்பர்ட் தினமும் போதகம் செய்ய செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டி விடுவது வழக்கம். நேற்று கிங்ஸ்லி கில்பர்ட் வீட்டுக்கு சென்ற போது குழந்தைகள் இல்லை. அவர்களைத் தேடிய போது பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் கிங்ஸ்லி கில்பர்ட் குழந்தைகள் மீது சாத்தான் புகுந்து விட்டதாகவும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளனர் என நினைத்து மூன்று குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்து சாத்தானை விரட்டுவதாக கூறி கொடூரமாக தாக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Savitha
மே 31, 2025 14:41

அந்த குழந்தைகளின் அம்மா எங்கே போனார் இந்த ஆள் அந்த குழந்தைகளை கட்டி வைத்து அடிக்கும் போது?.... அம்மா பெயர் சஜினி என்று எல்லாம் போட்டிருக்கு, ஆனா இப்படி அடிக்கும்போது அந்த அம்மா வந்து ஏன் தடுக்கவில்லை? ஒண்ணும் புரியலை.


ருத்ரன்
மே 31, 2025 11:16

இவர்கள் மதங்களில் சொல்லபடும் சாத்தான்கள் இந்து மதத்திலும் உள்ளன. கருப்பு, முனி என்ற தேவதைகளின் சொரூபமாக மனிதர்களின் உடல்களில் அவர்கள் வரும்போது, நாம் அவர்களை வழிபடுகிறோம். இவர்கள் அனைவரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் சிவபெருமானையும் பரப்பிரம்மமாக வழிபடுகிறோம். மற்ற மதங்கள் அவ்வாறு பார்ப்பதில்லை.


ஆரூர் ரங்
மே 31, 2025 10:37

மறு கன்னத்தை காட்ட கற்றுக் கொடுத்திருப்பார்.


நீலமேகம்
மே 31, 2025 08:55

அதே போல் அந்த ஆளைக்கட்டி வச்சு அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்


Palanisamy T
மே 31, 2025 04:35

சாத்தான் குழந்தைகளிடம் புகவில்லை போதகர் என்ற போர்வையில் பொய்யான வாழ்க்கை வாழும் இவர் உடம்பில்தான் புகுந்துவிட்டது இவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயங்கள் - ஒன்று மத போதனை, மற்றோன்று சாத்தான். நீதிமன்றத்தில் சொல்லுங்கள் -குழந்தைகளின் உடம்பில் சாத்தான் புகுந்துவிட்டது, அதனால்தான் தாக்கினேன் என்று. நீதிமன்றம் ஏற்குமா?


மீனவ நண்பன்
மே 31, 2025 03:52

சாத்தான்கள் இந்து கிறிஸ்து முஸ்லீம் மதங்களில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று


GSR
மே 31, 2025 03:15

சப்கிளினிக்கல் மன நோயாளி. மன நல மருத்துவ சிகிச்சை அவசியம்


புதிய வீடியோ