| ADDED : பிப் 18, 2024 05:57 AM
சென்னை : 'சமாதான திட்ட வரி நிலுவை, 2021 மார்ச் வரை பொருந்தும் என்பதை, வரும் மார்ச் வரை மாற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் விடுத்த அறிக்கை:வணிக சங்கங்களின் தொடர் கோரிகையை ஏற்று, சமாதான திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அத்திட்டத்திற்கான அவகாசம் வரும் மார்ச், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2021 மார்ச், 31க்கு முன் வரி விதிப்பாணை வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள இனங்களுக்கு மட்டுமே இந்த சமாதான திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.அதன்பின் நிறைய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, வரி நிலுவையில் இருந்து வருகிறது. அந்த இனங்களையும் சமாதான திட்டத்தில் சேர்க்க வேண்டும். எனவே, 2021 மார்ச் வரை நிலுவை உள்ள இனங்களுக்கு பொருந்தும் என்பதை, இந்தாண்டு மார்ச் வரை என, மாற்ற வேண்டும்.அதற்கு ஏற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள தொகையை திட்டத்தில் சேர்க்க வேண்டும். சமாதான திட்டத்தில் மனுத்தாக்கல் செய்யும் போது ஏதேனும் சிறு தவறு இருந்தால், அதை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.