உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சாரம் தந்தால் அபராதம்

குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சாரம் தந்தால் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையில் கிடைக்கிறது. ஆனால், இந்த இரு வகை மின்சாரமும் நாள் முழுதும் ஒரே சீராக கிடைக்காது. அதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக, அடுத்த நாள் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்தவர்கள், முந்தைய நாளே மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.ஏனெனில், அதிகம் வழங்குவதாக தெரிவித்து குறைவாக வழங்கினால், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மின் வழித்தடங்களிலும் பாதிப்பும் ஏற்படுகிறது.எனவே, முன்கூட்டியே தெரிவித்த அளவை விட, 15 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கலாம்; அதற்கு மேல் குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சார அளவு இருந்தால், யூனிட்டிற்கு அதிகபட்சம், 3 காசு வீதம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. இது, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Varadarajan Nagarajan
பிப் 04, 2024 18:08

மின் வாரியமும், ஒழுங்குமுறை ஆணையமும் தனியாருக்கும், மற்றவர்களுக்கும் இதுபோல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கண்டிஷன்களை போடும். ஆனால் மின் வாரியத்தின் உற்பத்தி நிலையங்களுக்கு இதுபோன்ற கண்டிஷன்களை பற்றி வாய் திறக்காது. மின் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் அதன் வரவு செலவு அறிக்கையை ஆணையத்திடம் வழங்கவேண்டும். ஆணையம் அதை பரிசீலித்து நடுநிலையான ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆணையத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி கணக்கை கேட்காமல், மாற்றாக தானே முன்வந்து வாரியத்திற்கு கட்டண உயர்வை அறிவிக்கும். இதுதான் நடுநிலையான ஆணையத்தின் வேலையா? மின் வாரியம் தனது மின் பகிர்மானத்தில் ஏற்படும் நஷ்ட்டத்தை படிப்படியாக குறைக்கவேண்டும், இதை வாரியம் செய்யாதபோது ஆணையம் மௌனமாக இருப்பது ஏன்? இந்த பிரச்னையில் புதுப்பிக்க சக்தி கொண்டு மறுநாள் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை எப்படி முதல்நாளே கணக்கிடுவது என்று ஆணையமே விளக்குமா? அல்லது அபராதம் மட்டுமே விதிக்க ஆணையிடுமா? மின் வாரியத்திற்கு எந்தெந்த வகையில் வ்ருமானம் கொண்டுவரலாம் என்பதை மட்டுமே ஆணையம் செய்து வருகின்றது.


தத்வமசி
பிப் 04, 2024 09:12

எல்லாம் கட்டிங்கில் சரியாகி விடும்.


Ramesh
பிப் 04, 2024 08:29

நம்ப ஆளுங்களுக்கு இந்த விதிமுறையை எதிர்கொள்ள தெரியாதா இல்லை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தெரியாதா. ஒப்பந்தம் போடும்போது யூனிட்டுக்கு 10 பைசா கூடுதல் போட்டால் அபராதம் போக மீதி வரும் 7 பைசாவை மின்சாரம் தயாரிப்பாளரும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டு கொள்ளலாம். இந்த வழி வகை செய்வதற்கு நீதிமன்றமே துணை போகலாமா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 04, 2024 08:25

காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையில் கிடைக்கிறது. ஆனால், இந்த இரு வகை மின்சாரமும் நாள் முழுதும் ஒரே சீராக கிடைக்காது என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு எப்படி மறுநாள் எவ்வளவு வெயில் அடிக்கும், எவ்வளவு காற்று அடிக்கும் என்று கணித்து, முதல்நாளே எவ்வளவு மின் உற்பத்தி ஆகும் என்று தெரிவிக்க முடியும்? நம்ம அரசு ஊழியர்களின் முட்டாள்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லை.


Iniyan
பிப் 04, 2024 08:23

பைத்திய காரதனமான முடிவு


Sampath
பிப் 04, 2024 08:07

Foolish type of punitiative measure.


அப்புசாமி
பிப் 04, 2024 07:47

நிர்வாகம் சரியா செய்யத்தெரியார தத்திகள். அடிக்கடி ஏன் பவர் கட் வருதுன்னா எஸ்கேப் ஆயிருவாங்க. ஏன் நஷ்டத்தில் போகுதுன்னா அணில் கடிச்சிருச்சும்பாங்க்க.


Kasimani Baskaran
பிப் 04, 2024 07:27

மைக்ரோ கிரிட் போன்ற நவீனத்தொழில் நுணுக்கம் தவிர இதெல்லாம் தீக்க முடியாத பிரச்சினை. சூரிய ஒளியின் அளவு, மேக மூட்டத்தின் அளவு போன்றவை அவ்வளவு எளிதில் மதிப்பீடு செய்ய முடியாது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ