உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுக்கடுக்கான குற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

அடுக்கடுக்கான குற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

விழுப்புரம்; விழுப்புரத்தில் மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,விழுப்புரத்தில் மா.கம்யூ., கட்சியின் 24வது மாநில மாநாடு இன்று (3ம் தேதி) துவங்கி, 5ம் தேதி வரை நடக்கவுள்ளது. அகில இந்திய மாநாடு வரும் ஏப்., 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. மாநாட்டில் தமிழக மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படும்.தமிழக மக்களின் வாழ்வு நெருக்கடியில் உள்ளது. வேலையின்மை, சமூக பாதுகாப்பின்மை, பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை, வன்முறை அடுக்குமுறை, பெண்கள், குழந்தைகள் மீதான அடுக்கடுக்கான குற்றங்கள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாற்றம் தேவை என்பதால் இடதுசாரி கொள்கைகளை நோக்கி மக்கள் திரும்ப, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த மாநாட்டில் ஆலோசிக்க உள்ளோம்.அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அது தொடர்பான எப்.ஐ.ஆரை வெளியிட்டது அந்த மாணவிக்கு இழைத்த பெரும் கொடுமையாகும். மத்திய தகவல் முகமை மீது கூட தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.பல்கலைக்கழகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் இல்லையென்றால் யார் பொறுப்பேற்பது. இங்கு ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.மாணவி பாதிக்கப்பட்ட விஷயத்தில் உடனே புகார் கொடுக்காமல் இருந்ததற்கு, கவர்னர் தான் காரணம். தமிழக போலீசார், ஜனநாயக ரீதியாக நடக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காமல் கைது செய்வது தேவையற்றது. அரசியல் சாசன உரிமைக்கு அப்பாற்பட்டது ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

s chandrasekar
ஜன 03, 2025 13:33

இவன் பயங்கர உண்டியல் குலுக்கி. அறிவாலய வாசல் நிரந்தர அல்லக்கை. இவன் ஒரு குட்டி வைகோ. Sella காசு.


Yes your honor
ஜன 03, 2025 13:11

"தமிழக மக்களின் வாழ்வு நெருக்கடியில் உள்ளது. வேலையின்மை, சமூக பாதுகாப்பின்மை, பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை, வன்முறை அடுக்குமுறை, பெண்கள், குழந்தைகள் மீதான அடுக்கடுக்கான குற்றங்கள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். " இதை தெளிவாக புரிந்துவைத்துள்ளதால், பொதுவெளியில் திமுக அரசிற்கு முட்டுக்கு கொடுத்தால், இந்த துக்ளக் அரசின் மீது கொந்தளித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் கை கால்களிலிருந்து ஏதாவது பறந்துவரும் என்பதால், தற்காலிக நல்லவன் வேஷம் போட்டுள்ளார். மற்றபடி காரில் ஏறி அமர்ந்தவுடன், அடுத்த செகண்ட், கையில் ஜாலராவை எடுத்து வைத்துக் கொண்டு திருப்புகழ் பாட ஆரம்பித்துவிடுவார். ஏனெனில் அது அவருக்கு சர்வைவல் பிராபளம். " இங்கு ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். " - தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறாரா?


Velayutham rajeswaran
ஜன 03, 2025 11:30

கருப்பன் குசும்பு காரன் திரும்பவும் காசு கேட்கிறான்


s chandrasekar
ஜன 03, 2025 13:30

பெரிய பெட்டி இந்த உண்டியல் குலுக்கி.


சம்பா
ஜன 03, 2025 11:08

இது நாள் வரை தூங்கு ணயா அழிக்கபட வேண்டியகட்சி இது ம் இன்னும் சிலதும்


Minimole P C
ஜன 03, 2025 07:50

For your policies and actions, the distance is equal to moon and earth. First be sincere to your policies, people automatically support you.