உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசிலும் ஏமாற்றம் பதிலடிக்கு மக்கள் தயார்

பொங்கல் பரிசிலும் ஏமாற்றம் பதிலடிக்கு மக்கள் தயார்

பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகையாக ரூ. 2500 வழங்கினோம். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், விலைவாசி அதிகமாகி இருப்பதோடு, மக்கள் சந்தோஷமாக பொங்கல் கொண்டாடுவதற்கு ஏற்ப, ரூ. 5000 கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்; அரசுக்கும் அழுத்தம் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு பொங்கல் பரிசுத் தொகையாக தொகுப்புடன் எதையும் வழங்கவில்லை. நியாயமாக பார்த்தால், இன்றைக்கு இருக்கும் சூழலில், ஸ்டாலின் ரூ. 20 ஆயிரத்தை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கி இருக்க வேண்டும். சொன்னது எதையும் செய்யாத முதல்வர், இந்த விஷயத்திலும் மக்களை ஏமாற்றி உள்ளார். இதற்கெல்லாம், வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், சரியான பதிலடி கொடுக்க மக்கள் தயார். செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !