உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தி: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

தி.மு.க., அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தி: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

சென்னை: ''தி.மு.க., அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,'' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.த.வெ.க., என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய்க்கு தேர்தல் ஆலோசனைகளை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வழங்கி வருகிறார்.

சவால்

அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விஜய் முயற்சி செய்கிறார். தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக விஜயை உருவெடுக்க வைக்க உதவப் போகிறேன். அவரது பிரபலம் காரணமாக அவருக்கு பலம் உள்ளது. ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியன தமிழகத்தின் பெரிய அரசியல் சவாலாக உள்ளது. உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட நிறைய பணம் செலவாகிறது. இது பெரிய ஆபத்து. தமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. இதற்கு பா.ஜ., தான் காரணம். அக்கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் உள்ளது. இதுவே ஆபத்துக்கான சான்று. வாரிசு அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்களின் நிலை என்ன?

அரசியல் களத்தில்

கட்சியின் அமைப்பு பலத்தை பெருக்குவதுதான் த.வெ.,க.,வின் பெரிய சவாலாக இருக்கும். விஜய்க்கு ரசிகர் பலம் இருந்தாலும் அதனை ஓட்டாக மாற்ற வலுவான கட்டமைப்பு அவசியம். அதுதான் மிகப்பெரிய சவால். தொழில்நுட்ப யுகத்தில் இதனை சாதிக்க முடியும். மக்களிடம் உள்ள ஆதரவை ஓட்டாக மாற்றுவது பெரிய சவால். விஜய், கடைசி படத்தை முடித்து விட்டு, ஒரு மாதத்தில் தீவிரமாக அரசியல் களத்தில் பணியாற்றப் போகிறார்.தமிழகத்தில் பெரும்பாலானோர். புதிய நேர்மையான அரசியல் மாற்றத்தை தேடுகின்றனர். அவர்களின் ஆதரவை விஜய் பெற்றுள்ளார். அவர் 8 அல்லது 12 சதவீத ஓட்டு வாங்க வாய்ப்பு இல்லை. ஒன்று பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும். அல்லது அதலபாதாளம் தான். இன்னும் 5, 10 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். அ.தி.மு.க., விஜய் பரஸ்பரம் விமர்சிக்கவில்லை என்பதற்கு அவர்களிடம் தான் காரணம் கேட்கவேண்டும்.

நிலைப்பாடு

விஜய் தனித்து நிற்கவே விரும்புகிறார். அது மாறும் என தோன்றவில்லை. டிச., வரை கூட்டணி கிடையாது. த.வெ.க., தனித்து போட்டியிடும் என உறுதியாக சொல்ல முடியும். நிலைமை மாறினால், அதற்கு ஏற்றவாறு ஜனவரியில் முடிவெடுப்போம். எங்கள் திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். தனித்து போட்டி என்பது தான் முடிவு. அடுத்த 6, 8 மாதங்கள் அவர் தீவிரமாக களமாடுவார். அதன் பிறகு கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி முடிவெடுப்போம். தனித்துப் போட்டி என்பது நிலைப்பாடு.திமுக., மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. பெரிய நம்பிக்கை கொடுத்து ஆட்சிக்கு வந்த அக்கட்சி மீது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கூட்டணி பற்றியோ, கூட்டணியை தேடுவது பற்றியோ விஜயிடம் சிந்தனை இல்லை. விஜய் தனித்து நின்றால் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. தீவிரமாக உழைத்தால் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினால் தனித்து ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

அவசியம் ஏன்

இதே திமுக.,கூட்டணி தொடர்ந்தால், பாஜ., உடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால், விஜய் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. கடுமையான களப்பணி ஆற்றும் போது இதற்கான வாய்ப்பு உள்ளது.விஜய் முழு நேரம் களப்பணி ஆற்ற வேண்டும். முழு மனதோடு பணியாற்றவேண்டும் என்பது எனது அறிவுரை. தி.மு.க., தான் தமிழகத்தின் ஆளுங்கட்சி என்பதால் அக்கட்சியை எதிர்க்கிறார். பா.ஜ., தமிழகத்தை ஆட்சி செய்யவில்லை. மாநல தேர்தலில் தேவையைதாண்டி பா.ஜ.,வை எதிர்க்க வேண்டியது ஏன்? இங்கு அக்கட்சி ஒரு சக்தியே கிடையாது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Nanjan Rangasamy
மார் 02, 2025 11:19

பிரசாந்த் கிஷோரால் அவருடைய கட்சியை அவர் மாநிலத்தில் வெற்றிபெற வைக்க முடியவில்லை.எனவே தமிழகத்தில் இவருடைய யூகம் பிஜேபியிடம் எடுபடாது.


Oviya Vijay
மார் 02, 2025 11:16

பிஜேபியில் உள்ளோர் அனைவரும் ஏதோ உத்தமர்கள் என்பது போல் மக்கள் மத்தியில் சீன் போட்டுக் கொண்டுள்ளீர்கள்... உங்கள் கட்சியைச் சார்ந்தோர் அனைவரும் வேண்டுமானால் அக்னிக் குண்டத்தில் இறங்கி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள்... பார்க்கலாம்... ஏதோ சத்திய சீலர்கள் போல் பேசிக்கொண்டு... நடப்பு காலத்தில் அரசியலில் யாரும் உத்தமர்கள் இல்லை திமுகவினர் உட்பட... காமராஜர் காலத்தோடு அதெல்லாம் முடிந்து விட்டது. அரசியல் என்ற போர்வையில் இருப்பவர்கள் அனைவருமே அயோக்கியர்களே பிஜேபியினரையும் சேர்த்து... இன்றைய காலகட்டத்தில் தேர்தல் என்று வந்தால் வேறு வழியின்றி அதிலே ஓரளவுக்கு நல்ல அயோக்கியனையே தேர்ந்தெடுக்க மக்கள் முற்படுகிறோம். அவ்வளவே... அத்திப் பூத்தாற் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக இருக்க முயல்கிறார்கள்... நான் என் முந்தைய பதிவில் கூறியதைப் போல தற்போதைய சூழ்நிலையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியினர் மீது தான் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே இல்லை என்பதே உண்மை... இவர்கள் போதாதென்று கவர்னர் சங்கிமங்கிகளின் மொத்த உருவமாக இருக்கிறார்... சொல்லிக்கொள்ளும் படியான எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இங்கே இல்லாத போது வலுவான கூட்டணி கொண்ட ஆளுங்கட்சி ஆட்டோமேட்டிக்காக ஜெயிக்கப் போவதில் ஆச்சர்யப் படுவதில் ஒன்றுமில்லை. ஆனால் அதில் வேடிக்கை என்னவென்றால் முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் தலைமையிலான தவெக மற்ற அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி வாக்குவங்கியில் இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறியிருக்கும்... இதற்கும் காரணத்தை சொல்கிறேன்... சமீபத்தில் இரண்டு கட்சிகள் Get Out என்று ஒருவரை ஒருவர் சமூக ஊடகங்களில் தாக்கி ஹாஸ்டேக் போட்டு தங்களுக்குள் வசைபாடிக் கொண்டிருந்த போது சப்தமே இல்லாமல் யாருமே எதிர்பாராவிதமாக #TVKFORTN என்று ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தார்களே நினைவில் இருக்கிறதா... அதுபற்றி விஜய் குறிப்பிட்ட போது இவர்களை ஸ்லீப்பர்செல் போல் என கூறியிருந்தார்... அவர்கள் சப்தமே இல்லாமல் தங்கள் வேலையை தேர்தலிலும் வாக்குகள் மூலமாக காண்பிப்பார்கள்... தேர்தல் முடிவுகள் வரும் வேளையில் மற்ற கட்சிகளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 02, 2025 08:41

இப்போது கூட இந்த பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு தான் வேலை செய்து கொண்டு உள்ளார். இவர் முதலில் பாஜகவிற்கு தேர்தல் வியூக நிபுணராக இருந்தார். பாஜக ஆட்சி பிடித்து நல்ல முறையில் ஆட்சி செய்ததன் விளைவு அவர்கள் இன்றுவரை ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்கள். திமுக எப்பொழுதும் போல ஸ்டிக்கர் ஒட்டும் பாணியில் பாஜகவை பார்த்து இவரை தேர்தல் வியுகம் வகுக்க வைத்து கொண்டது. அப்போது திமுக எதிர்கட்சி அதிமுக ஆளும் கட்சி. அதிமுக மேல் அதிருப்தி என்று சொல்வதை விட அதிமுக மேல் ஜெயலலிதா இறப்பதற்கு பின்னர் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது மக்களிடத்தில். காரணம் சசிகலா பன்னீர்செல்வம் பழனிச்சாமி தினகரன் போன்றவர்களால். அந்த நம்பிக்கையின்மையை தான் இந்த தேர்தல் வியுக நிபுணர் கொடுத்த யோசனை படி கமல்ஹாசனை களம் இறக்கி இளம் தலைமுறையினர் ஓட்டுகளை சிதறடித்து நடுத்தர வயதினரை குழப்பி அவர்கள் ஓட்டுகளை சிதறடித்து திமுகவை வெற்றி பெற வைத்தார். இப்போது திமுக ஆளும் கட்சி. திமுகவிற்கு நன்கு தெரியும் தங்கள் கட்சியில் தலை முதல் கால் வரை உள்ளவர்கள் பேசிய செய்த நடந்து கொண்ட கீழ் தரமான பணத்திற்காக செய்த செயல்கள் காரணமாக கடும் அதிருப்தி திமுகவின் மேல் மக்களிடையே உள்ளது என்று. இந்த இலட்சிணத்தில் தேர்தல் வியுக நிபுணர் என்று ஒருவரை திமுக நேரடியாக களம் இறக்கினால் அதுவே எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக போய் விடும். மேலும் திமுக தலைமை திமுக அரசு இரண்டு வருடங்களுக்கு முன்னரே நன்கு தெரிந்து விட்டது தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் திமுகவின் தொண்டர்கள் மந்திரிகள் யாரும் கட்டுப்பாட்டில் இல்லை இனி கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் முடியாது என்று. கமல்ஹாசன் வேலை முடிந்ததும் அவர் வளர்ந்து தொல்லை கொடுத்து விடக்கூடாது என்பதற்காக திட்டம் இட்டு அவரை கட்சிக்குள் வளைத்து போட்டு ஓரம் கட்டி பெட்டி பாம்பாக அடக்கப் பட்டு விட்டது. ரஜினிகாந்த் ஏற்கனவே பல் பிடுங்கப் பட்ட பாம்பு. அது எங்கே சுற்றினாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. பல் பிடுங்கப் பட்ட பாம்புக்கு அவ்வப்போது பசிக்கு தீனி போட்டால் போதுமானது. ஆகவே புதிதாய் இந்த தேர்தல் வியுக நிபுணர் கொடுத்த யோசனை படி விஜயை களமிறக்கி அவருக்கு சாதகமாக தேர்தல் வியுக நிபுணர் களமிறங்குவது இறக்கி இளம் தலைமுறையினர் ஓட்டுகள் நடுத்தர வயதினரை குழப்பும் அதே தேர்தல் வியுக பாணியை விஜய்க்கு செய்வது போல் செய்தால் ஓட்டுகள் பிரிந்து தங்கள் திமுக ஓட்டுகள் சிதறாமல் விழுந்தால் கூட வெற்றி பெற்று விடலாம் என்பது திமுக மற்றும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியுகம். இந்த 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் கமல்ஹாசனும் பல் பிடுங்கப் பட்ட பாம்பாக மாற்றப்பட்டு அவ்வப்போது செத்த இறைச்சி போட்டு வளர்க்கப்படுவார். இந்த விஜய் அடுத்த ஸ்டேண்ட் பை பாம்பாக அல்லது ஸ்டெப்னி பாம்பாக அல்லது பை பாஸ் பாம்பாக பல் பிடுங்கப் பட்டு வளர்க்கப்படுவார். அதற்கு அடுத்து விஷாலோ அல்லது சிவகார்த்திகேயனோ பாம்பாக அவதாரம் எடுக்கலாம் இந்த வியூகம் 2026 வெற்றி பெற்றால்.


கிருஷ்ணன்
மார் 02, 2025 06:37

ஏம்ப்பா கிசோரு நீ தானே அந்த ஊசிப்போன பழைய பக்கோடாவ 350கோடி வாங்கிட்டு வித்துட்டு போன அப்போ தெரியலையா அது வேஸ்ட் புராடக்ட் என்று


D.Ambujavalli
மார் 02, 2025 06:10

போன 2021 இல் இதே ஸ்டாலினுக்கு 350 கோடியை வாங்கிக்கொண்டு வியூகம் அமைத்து ஜெயிக்க வைத்தாரே அப்போது dmk பரம நேர்மை, யோக்கியமான கட்சியாக இருந்து, இன்றுதான் முதல்முறையாக ஆட்சி அமைத்து, மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கிறதா? பேசியது 200, 300, கொலுசு, குடம், மூக்குத்தி இத்தனையும்தான் கள்ள வோட்டுக்களும் கைகொடுப்பதுதான் எல்லாக்கட்சிகளிலும் நடக்கிறது இன்று விஜய் மாட்டினார் சிலபல கோடிகளை அறுவடை செய்வார் தப்பித் தவறி ஓரிரு தொகுதி வென்றுவிட்டால் credit ஐ எடுத்துக்கொள்வார் , அவ்வளவுதான் நடக்கும்


Priyan Vadanad
மார் 02, 2025 01:41

பிரஷாந்தும் விஜய்யும் இருக்கிற போட்டோவை பார்த்து விஜய்யின் கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன என்று பிரஷாந்த் சொல்வது போல இருக்கிறது. டிஎம்கே மீது அதிருப்தி என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம். இதை சொல்லக்கூட ஒரு வடநாட்டு மேதை தேவைப்படுகிறது. அதே நேரத்தில் உள்துறையும், ஒட்டுமொத்த துறையும், அதற்கு பிரதிநிதியாக இருக்கும் வெங்காயமும் சொன்னால் எவரும் கேட்கமாட்டேன் என்கிறார்கள். அது மட்டும் ஏன்?


Oviya Vijay
மார் 01, 2025 23:57

மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்பது உண்மை. ஆனால் அதை விட மக்கள் மத்திய அரசின் மீதும் கவர்னர் மீதும் பிஜேபி மாநில தலைமை செய்யும் கோமாளித் தனங்கள் மீதும் மற்றும் சிதறிக்கிடக்கின்ற எதிர்க்கட்சிகளின் மீதும் மிக மிக கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதன் விளைவு 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சி அமைக்கும்... தவெக ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரங்கட்டி இரண்டாம் இடம் பெறும்... சீமான் எல்லாம் காணாமல் போயிருப்பர்... விஜயகாந்த்தை நாங்கள் மனதில் நினைத்துக் கொள்கிறோம் என்று நினைத்து மக்கள் தேமுதிகவை மறந்து போயிருப்பர்... ஆயிரம் முறை மோடியை வைத்து ரோடு ஷோ நடத்தினாலும் தமிழகத்தில் பிஜேபிக்கு 2026 தேர்தலிலும் சங்கு தான்... அதிமுகவின் மக்கள் பிரதிநிதித்துவம் முழுமையாக ஜீரோவாகிப் போகும்...


vadivelu
மார் 02, 2025 03:53

2026 ல் நடைபெற போகிற தேர்தல் கவர்னரை எதிர்த்தோ, மோடியை எதிர்த்தோ இல்லை. தி மு க அடி பொடிகள் அலம்பல்களை எதிர்த்துதான். விஜய் இரண்டாவதாக வருவது காணவில்தான். தி மு க அல்லது அண்ணா தி முக இரண்டு மட்டுமே முதல் இரண்டு இடங்களை பெரும். விஜய் சீமான் கட்சி அளவு கூட நெருங்க மாட்டார்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 02, 2025 08:52

சார் அதிருப்தி என்பது ஆளும் கட்சி மீது மட்டுமே இருக்கும். எதிர் கட்சிகள் மீது அதிருப்தி இருக்காது. எதிர் கட்சிகள் மீது இவர்கள் செய்வார்களா மாட்டார்களா என்று சந்தேகம் மட்டுமே இருக்கும். அனால் ஆளும் கட்சி மீது இனி இவர்களால் முடியாது என்று சந்தேகம் இன்றி மக்கள் இருப்பார்கள். சந்தேகம் சாதகமாக மாறும் ஆனால் அதிருப்தி நம்பிக்கையின்மையை அதிகரித்து எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருக்கும். அதிருப்தியை திருப்தியாக மாற்றும் சக்தி பணத்திற்கு மட்டுமே உண்டு. கோமாளித்தனங்கள் எல்லாம் ஏமாளித்தனங்கள் ஆகி விடாது. சர்க்கஸில் என்ன தான் திறமையை கலைஞர்கள் காட்டினாலும் இரசிகர்கள் சிரித்து மகிழ்ச்சியை காட்டுவது சர்க்கஸ் கோமாளிகள் செய்யும் கோமாளித்தனங்களால் தான். எதிர் கட்சி மீது அதிருப்தி என்றால் ஆளும் கட்சி மீது அபிமானம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு ஆளும் கட்சி மீது அபிமானம் இல்லை என்பது இந்த உங்கள் கருத்தில் இருந்து நன்கு தெரிகிறது.


MARUTHU PANDIAR
மார் 01, 2025 23:46

வந்துட்டாரு நிபுணர் ....இதே ஜோசப்பு விஜய் 2026 இல் டீம்காவுடன் கூட்டு சேரலைன்னா என் மீசையை எடுக்கிறேன் பாரு என்ற ரீதியில் இப்பவே நெறய பேரு பெட் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமோ ? இதெல்லாம் சும்மா ஸ்டாண்ட் , பில்டப்பாம் . 2026 வரை இப்புடி தானாம் .


சகுரா
மார் 01, 2025 23:27

பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடரயா நீ?


சமீபத்திய செய்தி