உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரியார் பல்கலை துணைவேந்தரிடம் ஒரு மணி நேரம் விசாரணை

பெரியார் பல்கலை துணைவேந்தரிடம் ஒரு மணி நேரம் விசாரணை

சேலம்:சேலம் பெரியார் பல்கலையில் அரசு அனுமதின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' தொடங்கப்பட்டதா என, துணைவேந்தரிடம் விசாரணை நடைபெற்றது.சேலம் பெரியார் பல்கலையில் அரசு அனுமதியின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' நிறுவனத்தை, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர்கள் சதீஷ், பாரதிதாசன் உள்ளிட்டோர் தொடங்கியதாக, தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், கருப்பூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.இதுதொடர்பாக, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, துணைவேந்தருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. நேற்று அவர், சேலம், சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி விசாரித்தார்.பூட்டர் பவுண்டேஷன் அரசு அனுமதியின்றி தொடங்கப்பட்டதா, துணைவேந்தர் உட்பட, 4 பேரும் தலா ஒரு லட்சம் முதலீடு செய்தனரா, அரசு பொருட்கள், தேர்வு நடத்தும் தனியாருக்கு பயன்படுத்தப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை, உதவி கமிஷனர் கேட்டு, பதில் பெற்றார்.ஒரு மணி நேரம் நடந்த விசாரணை அனைத்தும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை