உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி

ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பகுதிநேர ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்க வந்தார். சீமான் ஆசிரியர்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்தனர். கைது செய்து வைக்கப்பட்டு உள்ள பகுதிநேர ஆசிரியர்களை சந்திக்க தன்னை அனுமதிக்க கோரி சீமான் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் நிருபர்கள், சந்திப்பில், சீமான் கூறியதாவது: தி.மு.க., அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். இது எப்படி குற்றமாகும். இந்த குற்றத்தை தூண்டியது யார்? இந்த வாக்குறுதியை கொடுத்தவர் தான் குற்றச்செயலுக்கு காரணம். அவர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அரசு வீடு தேடி அரசு என்று சொல்லி விளம்பரம் செய்கிறது. எத்தனை ஆயிரம் ரூபாய் கோடிகளை கொட்டி, இந்த திராவிட கட்சிகள், ஆட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும். சேவை அரசியலோ, செயல் அரசியலோ அவர்களுக்கு தெரியாது. அவர்கள் செய்யவும் மாட்டார்கள். இப்பொழுது வீடு தேடி அரசு என்று சொல்கிறார்கள். என் மக்கள் ரோடு தேடி போராடுவதற்கு வருகிறார்கள். அவ்வளவு பிரச்னை. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்கிறார். இதில் பெருமை ஏதும் இருக்கிறதா? இந்த அரசும், முந்தைய அரசும் மக்களுக்கு ஒரு லட்சம் பிரச்னைகளை கொடுத்து இருக்கிறது. ஒரு லட்சம் போராட்டங்களை அவர்கள் மீது திணித்து இருக்கிறது. போராடி கொண்டு இருப்பவர்கள், வீதியில் நிற்பவர்கள் யார் என்று யோசிக்க வேண்டும். பெற்றோர் இது தான் உலகத்தை காட்டுகிறார்கள். ஒவ்வொரு பிள்ளையையும் உலகத்திற்கு காட்டுவது ஆசிரியர் பெருமக்கள் தான். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
ஜூலை 17, 2025 17:01

ஸ்டாலின் தி.மு.க., ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது????அவ்வளவு கேவலமாக உனது ஆட்சி நடக்கிறதென்று போராட்டமா???அதிலேயே உன் ஆட்சியின் அவலம் தெரியுதே


D.Ambujavalli
ஜூலை 17, 2025 16:26

கொடுத்த வாக்குறுதியை 4 வருஷமாகியும் நிறைவேற்றாமல் , மக்களின் பிரசினைகளுக்கு செவி சாய்க்காமலும் இருந்து லட்சம் போராட்டம் நடக்குமளவு அவல ஆட்சி நடத்துவதைக்கூடப் பெருமையாக விளம்பரப்படுத்தும் விசித்திர முதல்வர்


N Sasikumar Yadhav
ஜூலை 17, 2025 15:23

திராவிட மாடல் அரசை தடவி கொடுக்கிற கூட்டணி கட்சியினரின் போராட்டத்துக்கு மட்டுமே அனுமதி


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 17, 2025 14:40

ஒரு இலட்சம் போராட்டம் நடந்திருக்கிறது. ஒரு இலட்சம் போராட்டம் அனுமதி தரவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா திமுகவின் ஆட்சி எவ்வளவு அவலட்சணமான ஆட்சி என்று. இலட்சனமான ஆட்சி என்றால் போராட்டங்களே இல்லாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்.


seshadri
ஜூலை 17, 2025 14:21

ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்றால் அவ்வளவு மோசமாக ஆட்சி நடக்கிறது என்று அர்த்தம்.


Karthik Madeshwaran
ஜூலை 17, 2025 14:16

தமிழ்நாட்டு மக்களிடம் இவர் தமிழர் இவர் தமிழரல்லாதோர் என்று கேவலமான பிரித்தாளும் கொள்கையை கோட்பாடாக கொண்ட சீமான் அவர்களே, நீங்கள் எதிர்கட்சியாகவே எப்போதும் இருந்து மக்களுக்காக கூட நின்று போராடி கொண்டே இருங்கள். அதை தான் மக்களும் விரும்புகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை