உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்தார்.இது குறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது: பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் பிடித்து திரும்பவும் வனத்துக்குள் விட வேண்டும். 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் காட்டுப்பன்றி வரும் பட்சத்தில் வனத்துறையினருக்கு சுட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து வருங்காலங்களில் பரிசீலிக்கப்படும். வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது மத்திய அரசு தான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது. அதை நீக்குவது எளிதல்ல. மத்திய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

durai bala
ஜன 11, 2025 19:04

தமிழ்நாடு அரசு காட்டு பன்றிகளை விவசாயிகள் சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எந்த காரணங்களையும் கூறாமல் கேரளா அரசு போல அனுமதி வாங்காமல் விட்டால் தமிழ்நாட்டில் விவசாயமே செய்ய முடியாது


durai bala
ஜன 11, 2025 18:54

தமிழ் நாடு goverment


sundararajan
ஜன 11, 2025 09:01

காட்டுப்பன்றிகளை விட அதிகம் கேடு விளைவிப்பவை தீயமுக பன்றிகள்


mani moorthy
ஜன 11, 2025 03:01

குட் நியூஸ்


Puratchi Thondan
ஜன 10, 2025 23:32

முதல் கட்டமாக, கிலோமீட்டர் தொலைவினை காட்டுப்பன்றிகள் அறிந்துகொள்ள ஏதுவாக பல கோடி ருபாய் செலவில் அவற்றிற்கு GPS பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். எல்லை தாண்டினால் முதல் முறை அறிவுறுத்தப்படும், இரண்டாம் முறை நடவடிக்கை எடுக்கப்படும்.


நிக்கோல்தாம்சன்
ஜன 10, 2025 20:50

முதலில் கற்பழிப்பு மற்றும் அடுத்தவரின் சொத்தை ஆட்டயப்போடும் பன்றிகளை ஏதாவது செய்யுங்க பொன்முடி சார்


Ramesh Sargam
ஜன 10, 2025 20:26

நாட்டுக்குள் சுற்றித்திரியும் பாலியல் குற்றவாளி பன்றிகளை ஏன் இதுபோன்று சுட்டுக்கொள்ளக்கூடாது...?


Alagusundram Kulasekaran
ஜன 10, 2025 19:50

நாட்டில் நிறைய காட்டுப்பன்றிகள் உள்ளன அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு காட்டுப்பன்றி வந்துள்ளது அதனை சுட்டு தள்ளாமல் வேடிக்கை பார்ப்பது தவறு நாட்டில் பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி அது


K Raveendiran Nair
ஜன 10, 2025 19:08

சரியாகச் சொன்னார் பன்னி மேய்க்க கூட லாயக்கில்லை


Sundar R
ஜன 10, 2025 18:00

மாடு மேய்க்கவும் லாயக்கில்லை. கழுதை மேய்க்கவும் லாயக்கில்லை. பன்னி மேய்க்கவும் லாயக்கில்லை. இந்த மாதிரி ஆளுங்களைத் தான் தமிழக மக்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சட்டசபைக்கு அனுப்புகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை