உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்லப்பூனையை காணோம்; சென்னை போலீசுக்கு தலைவலி!

செல்லப்பூனையை காணோம்; சென்னை போலீசுக்கு தலைவலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அமைந்தகரையில், வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையை காணவில்லை என்று உரிமையாளர் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.சென்னை அடுத்த அமைந்தகரை, மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீலேஷ், 50. இவர், சூளைமேட்டில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது வீட்டில், செல்லமாக, நாய் மற்றும் பூனை ஒன்றை ஒன்றரை ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.திடீரென கடந்த, 17ம் தேதி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இருந்த பூனையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், ப்ளூ கிராஸ் அமைப்பிடம், ஸ்ரீலேஷ் புகார் அளித்தார். அமைந்தகரை போலீசிலும், கடந்த வாரம் புகார் அளித்தார். பூனை எங்கே என உரிமையாளர்கள் கேள்வி எழுப்ப, போலீசார் வழக்கு பதிந்து, பூனையை வலை வீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

குமார்கோபி
பிப் 27, 2025 20:05

இவிங்க வேற... அநியாய அக்குரும்பு செஞ்ச சாரையே கண்டுபுடிக்கத் தெரியாத ஸ்காட்லாந்து யார்டு போலுஸ். பூனையை கண்டுபிடிக்கப் போகுதாக்கும்? போய் வேற பூனையை வாங்கி வளருங்க.


Karthik
பிப் 27, 2025 19:42

I Think.. அது, Black Cat.. ஆ இருந்திருக்கும். அதனாலதான் இப்ப தமிழக போலீஸுக்கு தலைவலி வந்திருக்கும். இல்லேன்னா பின்னே.. காணாமபோன மனுஷனையே கண்டுபிடிக்காத போலீஸ், சாதாரண வளர்ப்பு பூனையை தேடி அலையுமா என்ன?? Something Wrong..


kulandai kannan
பிப் 27, 2025 13:49

ரோடு ரோலரும், பூனையும் ஒரே நாளில் திருட்டுப் போவது இங்குதான் நடக்கும்.


Veeraputhiran Balasubramoniam
பிப் 27, 2025 12:13

நாய், பூனை எலி.. இவற்றின் மீது காட்டும் அக்கறையில் 100ல் ஒரு பங்க்குகூட இன்று தமிழக அரசு மற்றும் காவல் துறை மேலும் நீதி பதிகள் மனித உயிர் மீதோ மகளிர் பாது காப்புக்கோ கொடுப்பது இல்லை. என்பது தான் மக்களின் ஆதங்கம்


Karthik
பிப் 27, 2025 19:28

அதுதான் மாதிரி மாடல் ஆட்சி. புரிஞ்சா சரி.. இல்லையேல் கோவிந்தா.. கோ..விந்தா..


N.Purushothaman
பிப் 27, 2025 11:24

ஐயோ பாவம் ....


மால
பிப் 27, 2025 11:05

இன பெருக்கத்துக்கு போயிட்டு திரும்பி வந்திடும். அநேகமா அது ஆண் பூனையா இருக்கலாம்


Devanand Louis
பிப் 27, 2025 10:42

சென்னை G5 போலீஸ் ஸ்டேஷன் சுபின்ஸ்பெக்டர்ஸ் எல்லோரும் அங்குள்ள மேடவாக்கம் தங்க ரோட்டில் உள்ள கடைகளில் மதம் மதம் வசூல் வாங்கிக்கொண்டு பலவித பிரட்டுவேலைகளில் இறங்கும் கடைகளை சப்போர்ட் பண்ணுகிறார்கள் ஆகையால் IG அவர்கள் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் மென்பது அங்குள்ள மக்களின் வேண்டுகோள்


Venkatesan Ramasamay
பிப் 27, 2025 09:35

பிரியாணி ரெடி ....


Sriniv
பிப் 27, 2025 08:39

அந்த பூனை ஒரு வேளை பிரயாக்ராஜ் சென்று இருக்கலாம் ... கொஞ்சம் காத்திருங்கள் திரும்ப வரும்.


S.V.Srinivasan
பிப் 27, 2025 08:39

அது எங்கையாவது போயிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை