உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஏதோ ஒரு காரணத்துக்காக நீதிபதிக்கு எதிராக மனு

 ஏதோ ஒரு காரணத்துக்காக நீதிபதிக்கு எதிராக மனு

வரும் 2026 சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. த.வெ.க., கூட்டணி வலுவாக இருந்தால், தி.மு.க.,வுக்கு கடும் போட்டியாக இருக்கும்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்தி லிங்கம், த.வெ.க.,வில் இணைவதாக வெளியாகும் தகவல் வதந்தி; என்னிடம் அவர் வருத்தப்பட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை நீக்கம் செய்ய, 'இண்டி' கூட்டணி சார்பில், தி.மு.க.,வினர் மனு அளித்துள்ளனர். நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் தான், நீக்குவதற்கு மனு அளிப்பது வழக்கம். ஆனால், தி.மு.க., இப்படி மனு அளித்தது வித்தியாசமாக உள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் இதை செய்கிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மாநில அரசு செய்ய வேண்டியதில்லை. - தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி