உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மினி பஸ் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

மினி பஸ் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை:தமிழகத்தில், போக்கு வரத்து வசதியில்லாத கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை, மாநில அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில் தாக்கல் மனுக்கள் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.மாலா பிறப்பித்த உத்தரவு: கிராமப்புற மக்களுக்கும் கடைசி மைல் வரை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவே, மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவி ல் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ