உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, 'கருணா ஸ்வீட்' என்ற பெயரில் பேக்கரி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'மாஸ்க்' அணிந்து பைக்கில் வந்த மூன்று பேர், மூன்று பெட்ரோல் குண்டுகளை பேக்கரி மீது வீசி தப்பினர். இதில், ஒரு குண்டு மட்டும் வெடித்து கடை தீப்பிடித்தது. எரியாத இரு பெட்ரோல் குண்டு களை வாணியம்பாடி போலீசார் மீட்டனர்.முன்னதாக தீயை அணைக்க முயன்றதில், பேக்கரி ஊழியர் நந்தகுமார் லேசான காயமடைந்தார். வாணியம்பாடி தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப் படுத்தி அணைத்தனர். ஆனாலும், பேக்கரியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை