உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!

நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தில் தி.மு.க., நிர்வாகி செல்வ சங்கர் வீட்டின் மீது மர்ம நபர்கள் அதிகாலையில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர்( 45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென, இவரது வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=apakb3ie&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. தற்போது, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் பாளை யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். முன்பகை காரணமாக செல்வசங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கலாமா? ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்னைகளில் அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மீனவ நண்பன்
மே 14, 2025 20:34

சவுக்கு சங்கர் வீடுன்னு தவறுதலா வீசிட்டாங்களா


Barakat Ali
மே 14, 2025 16:52

எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தைத் தீர்மானிப்பது நாம்தான் ....


Barakat Ali
மே 14, 2025 16:51

கொடிகட்டி பிழைக்கிறாரா ???? அதுக்குமா எதிரிகள் ????


என்றும் இந்தியன்
மே 14, 2025 16:48

இவனுக்கு இன்னும் உயர் பதவி வேண்டுமாம் திமுகவில் அதற்காக அவனுடைய உதவியாட்களை வைத்து இந்த மாதிரி நாடகம்? உண்மையிலே இவனை ஒழித்துக்கட்ட வீசப்பட்ட பெட்ரோல் குண்டு என்றால் வீடு தீப்பிடித்து நாசம் ஆகியிருக்கவேண்டும்???அப்படி ஆனதா ?? இல்லையல்லவா???


K.Ramachandran
மே 14, 2025 16:18

தமிழகம் அமைதி பூங்கா தான். நம்புங்க மக்களே


V Venkatachalam
மே 14, 2025 15:05

சுடாலின் நான்-காண்டு ஆட்சியில் எதுவுமே பரபரப்பு இல்லை. எல்லாமே ஆஸ் யூஷுவல் தான்.


Murthy
மே 14, 2025 12:10

இவனுகதானே இதை செய்வானுக? செய்தவனும் இதே கட்சிகாரணத்தான் இருப்பான். பங்கு தகராறு இருக்கும் . ....


அப்பாவி
மே 14, 2025 11:58

இது திருனவேலி. ஜாதி, மதம், போலுஸ், நீதிபதி, கட்சிப் பாகுபாடு பாக்காம கொலைகள் நடக்கும்.


ஆரூர் ரங்
மே 14, 2025 11:52

சாதாரண சிலிண்டரா இருக்கும். பெரிது படுத்த வேண்டாம்.


ravi
மே 14, 2025 11:26

அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை