உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடினர். இரும்பு கேட் பூட்டப்பட்டு இருந்ததால் அதன் மீது பெட்ரோல் குண்டு விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில் குண்டு வீசிய சிறுவனை போலீசார் இன்று சுட்டுப்பிடித்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=stqydead&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்' என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச முதல்வர் ஸ்டாலின் வெட்கமாக இல்லையா?போலீஸ் ஸ்டேஷன் கூட பாதுகாப்பான இடம் இல்லை' என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

இதுவே சாட்சி!

பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி. தமிழகத்தில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது.இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. ஸ்காட்லாந்துயார்டு போலீசாருக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக போலீசாரின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

M S RAGHUNATHAN
பிப் 04, 2025 09:56

சுட்டுப் பிடித்தார்களா அல்லது பிடித்துச் சுட்டார்களா


Kanns
பிப் 04, 2025 09:17

Another Fake UnWarranted Shooting. Its Not Impossible to Arrest-Prosecute FastTrack Convict Real Criminals


Chandrasekaran N
பிப் 04, 2025 12:56

Real Criminals are the politicians. Useless voters sell their votes. Unfortunately such voters vote are in majority ending up choosing wrong doers


BalaG
பிப் 04, 2025 08:45

செவுடன் காதில சங்கு


kumarkv
பிப் 04, 2025 08:25

பொண்டாட்டி கையால் அடி வாங்கினாங்க


பேசும் தமிழன்
பிப் 04, 2025 08:16

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விட்டுவிட்டு.. இது போல் யாராவது ஏமாளி கிடைத்தால்.. அவர்களிடம் வீரத்தை காட்டும் தமிழக காவல்துறை.. தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ???


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2025 07:40

இதுதான் திராவிட மாடல். அவர்கள் கூறுவது இதைத்தான். திமுக என்றாலே இதெல்லாம் சாதாரணம்.


Svs Yaadum oore
பிப் 04, 2025 06:47

.நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா?....எதிர்க்கட்சி தலைவர் கேள்வி ...


Svs Yaadum oore
பிப் 04, 2025 06:46

என்ன தான் நடக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சியில்? ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?....நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா?....எதிர்க்கட்சி தலைவர் கேள்வி ...


தேவராஜன்
பிப் 04, 2025 06:31

போலீஸ்கார் இந்த ஹரி சங்கி அல்லது பாஜக உறுப்பினர் அல்லது அதிமுக உறுப்பினர் என்று சொல்லி பிரச்சினையை தீர்த்து விட்ருங்க.


raja
பிப் 04, 2025 03:08

குற்றம் நடந்து முடிந்தபின் குற்றவாளியை கைது செய்வது காவல் துறையின் வேலை இல்லை குற்றமே நடக்காமல் தடுப்பது தான் காவல் துறையின் வேலை... இது நமது மாண்பு மிகு முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னது....மாடல் ஆட்சியில் இது சமையல் வாயு உருளை என்று உருட்டாமல் இருக்க வேண்டும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை