உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழாய் மூலம் காஸ் என்பது வேடிக்கையான வாக்குறுதி: சொல்கிறார் ப.சிதம்பரம்

குழாய் மூலம் காஸ் என்பது வேடிக்கையான வாக்குறுதி: சொல்கிறார் ப.சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: குழாய் மூலமாக காஸ் வழங்கப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்த நிலையில், 'குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், காஸ் எப்படி வழங்குவார்கள், இது வேடிக்கையான வாக்குறுதி' என காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் என எதுவும் இல்லை. நாட்டில் 5 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிடி ஆயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்? குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், சமையல் காஸ் எப்படி வழங்குவார்கள்? குழாய் மூலமாக காஸ் என்பது வேடிக்கையான அறிவிப்பு.

வீடுகளை காட்ட முடியுமா

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தேர்தல் அறிக்கையில் பா.ஜ., கூறியது பொய்க்கணக்கு. 4 கோடி வீடுகளை கட்டியிருந்தால், சராசரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 52 ஆயிரம் வீடுகளை கட்டி இருக்க வேண்டும். அப்படியெனில் சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ., அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளை காட்ட முடியுமா?

புல்லட் ரயில்

அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற வாக்குறுதியும் வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பா.ஜ., அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்தாதது ஏன்?. 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ரூ.11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ., அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

Godfather_Senior
ஏப் 18, 2024 20:11

அநேகமாக, எல்லா அடுக்குமாடி கட்டிடங்களிலும் குழாய் மூலம்தான் காஸ் சப்ளை செய்யப்படுகிறது ஆனால் எண்பதை நெருங்கும் சிவகங்கை சின்னப்பையனுக்கு மட்டும் மூளை வளரவில்லை என்பதையே இந்த மெகா திருடனின் பேச்சு காட்டுகிறது இல்லே முட்டாள்தனமான பேச்சுக்காக சுடலையுடன் போட்டியிடுகின்றாரோ ?இந்த வருடம் ஜூலை க்குப்பிறகு இவனெல்லாம் கோபாலபுர குடும்பத்துடன் சேர்ந்து திஹார் ஜெயிலில் களி உண்பார் என்பது நிச்சயம்


Dr.C.S.Rangarajan
ஏப் 18, 2024 18:41

மும்பையில் லைப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் குடி இருப்பு பீமா நகர் என்று அந்தேரியில் இருக்கிறது அங்கு, எரிவாயு பைப்பு வாயிலாகத்தான் வழங்குவதை பல ஆண்டுகளுக்குமுன் நான் நேரில் கண்டவன்


Sankar Ramu
ஏப் 18, 2024 16:17

உங்க ஆட்சியில எதும் முடியாதுதான் இது மோடி ஆட்சி தண்ணீர் கூட கொடுக்க முடியாத திமுகவை பேசியது சிறப்பு


Ravi Ram
ஏப் 18, 2024 14:28

உலகம் முழுக்க பைப் தாண்


R.CHELLAPPA
ஏப் 18, 2024 12:12

In Gujarat many major cities are pipelined gas facilities So everything is possible provided if politicians are sincerely taking the issues without expecting any benefits out of it


kumarkv
ஏப் 18, 2024 10:17

குழாய் மூலம் பாக்கிஸ்தானில் பிரிண்ட் செய்த 2000ர்ஸ் இந்திய ரூபாயை இவரு அனுப்புவார்


Dharmavaan
ஏப் 18, 2024 06:12

எலக்ட்ரானிக் பெரிமாற்றம் பற்றி அன்று கேலிசெய்தான் இவன் இன்று நாட்டிலேயே அதிக உபயோகம் அதுதான் தோலை நோக்கில்லாத அறிவிலி இவன் ஹார்வார்ட் பல்கலையாம்


C.SRIRAM
ஏப் 17, 2024 22:07

உங்க குடும்பம் இத்தனை வருடங்கள் பதவியில் இருந்தாலும் ஏன் சிவகங்கை இன்னமும் முன்னேறவில்லை ? முதலில் இத்தேர்க்கு அதில் சொல்லிவிட்டு மற்ற கேள்விகளை கேட்கலாம்.


Vijay Anand J
ஏப் 17, 2024 20:45

அய்யாவே சொல்லிட்டாரு அப்போ கண்டிப்பா இந்த திட்டம் நிறைவேறிவிடும் டிஜிட்டல் இந்தியா தான் ஞாபகம் வருகிறது.


Varadharajan
ஏப் 17, 2024 19:56

சிந்தனை செய்ய வேண்டிய கேள்விகள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ